திருச்சி ஸ்பா செண்டரில் விபச்சார தொழில் செய்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி... ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

By Ganesh A  |  First Published Jul 21, 2023, 12:41 PM IST

திருச்சியில் ஸ்பா செண்டர் நடத்தி வந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர் அங்கு விபச்சார் தொழில் செய்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருச்சி கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் இயங்கி வரும் ஸ்பாவில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக திருச்சி விபசார தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறை (பொறுப்பு) காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வீட்டில் ஷைன் ஸ்பா என்ற பெயரில் கர்நாடகத்தை சேர்ந்த லட்சுமி தேவி என்பவர் இரண்டு பெண்களும் இருந்தனர். மேலும் வீட்டில் உள்ள பொருட்களை சோதனை செய்தபோது இந்த ஸ்பா சென்டர் உரிமை பெறாமல் பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக நடைபெறுவது தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கிருந்த இரண்டு பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்து, மேலாளர் லட்சுமி தேவி கைது செயதனர். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படியுங்கள்... காதல் மோசடி புகார் எதிரொலி... விசாரணை வளையத்துக்குள் சிக்கிய விக்ரமன் - அறம் வெல்லுமா? ஆக்‌ஷன் எடுக்கப்படுமா?

தொடர்ந்து கைது செய்யப்பட்ட லட்சுமி தேவியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் திருச்சி வயலூர் பகுதியைச் சேர்ந்த தளபதி விஜய் மக்கள் இயக்க திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளராக செயல்பட்டு வரும் செந்தில் என்பவர் தான் இந்த ஸ்பாவின் உரிமையாளர் எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விஜய் மக்கள் இயக்க நிர்வாகி விபச்சார தொழில் செய்து வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்பா உரிமையாளர் செந்தில் அண்மையில், பனையூரில் நடைபெற்ற மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று நடிகர் விஜய்யுடன் போட்டோவும் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஜனநாயகம் சீர்குலைந்துவிட்டது... மணிப்பூர் சம்பவம் குறித்து கமல்ஹாசன் காட்டம்

click me!