பெற்றோர் கஷ்டம் தீரும்... மாணவிகளை பிரைன் வாஷ் செய்து படுக்கைக்கு அழைத்த புரோக்கர் பேராசிரியை..!

First Published Apr 15, 2018, 1:53 PM IST
Highlights
proffessor nirmala brain wash the students


விருதுநகர் மாவட்டம் அருகே அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் கணித பேராசிரியையாக பணிபுரிந்து வந்த நிர்மலா தேவி என்கிற பேராசிரியை... கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை, மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள அழைத்தத்தாக வெளியாகியுள்ள ஆடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆசை வார்த்தை பேசிய பேராசிரியை:

மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும் இந்த கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக பணிபுரிந்து வருபவர் நிர்மலா. இவர் தேர்வுத்தாள் திருத்தும் பணிக்காக காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு சென்று வருவது வழக்கம். அப்படி சென்ற போது, அங்குள்ள உயர் பொறுப்பில் உள்ளவர்கள் கல்லூரி மாணவிகளை படுக்கைக்கு அழைத்து வந்தால் 85 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண்களுடன் , பணமும் தருவதாகவும், இதனால் உங்களுடைய பெற்றோர் கஷ்டம் தீரும் என்பது போல் மாணவிகளை பிரைன் வாஷ் செய்து ஆசை வார்த்தை கூறியுள்ளார். 

மாணவிகள் தங்களுக்கு விருப்பமில்லை என்றும், இது பற்றி பேசவேண்டாம் என்றும் மறுப்பு தெரிவித்த பின்னரும் விடாமல் அவர்களை நிர்ப்பந்தப்படுத்தும் விதமாக 19 நிமிடம் பேசி இருக்கிறார் புரோக்கர் பேராசிரியை நிர்மலா.

இந்த சம்பவம் குறித்து மாணவிகள் அளித்த புகாரை கல்லூரி நிர்வாகம் கிடப்பில் போட்ட நிலையில், புரோக்கர் போல பேசிய பேராசிரியையின் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியதால், பேராசிரியை நிர்மலாவை 15 நாள் சஸ்பெண்ட் செய்துள்ளது கல்லூரி நிர்வாகம். மாணவிகளிடம் பேசியதை ஒப்புக்கொண்டுள்ள நிர்மலா, தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் அந்த கல்லூரியில் படிக்கின்ற மற்ற மாணவிகளின் பெற்றோரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

பேராசிரியை நிர்மலா, மாணவிகளுடன் நடத்திய விபரீத உரையாடலின் பின்னணியில் இருக்கின்ற மதுரை காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகள் யார்? என்பதை கண்டறிந்து கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் பயிருக்கு பாதுகாப்பாய் இருக்க வேண்டிய, வேலியே பயிரை மேயச்சொன்ன இந்த விபரீத சம்பவம் குறித்து உயர்கல்வித்துறை விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

விருதுநகர் மாவட்டம் அருகே அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை ஒருவர், கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை, மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள அழைத்த ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

click me!