தளபதி 64’ படத்தை விட்டு வெளியேறினாரா அதன் தயாரிப்பாளர்?...

Published : Oct 14, 2019, 05:39 PM IST
தளபதி 64’ படத்தை விட்டு வெளியேறினாரா அதன் தயாரிப்பாளர்?...

சுருக்கம்

இந்நிலையில் விஜய்க்கே பெரிய சம்பளம் என்னும் நிலையில் மேலும் மூன்று ஹீரோக்களை படத்தில் கமிட் பண்ணியிருப்பதால் படத்தின் துவக்கத்திலேயே தயாரிப்பாளர்  சேவியர் பிரிட்டோ அலறிவிட்டதாகவும் அதனால் அவர் தன்னை படத்திலிருந்து விடுவித்து விடும்படி தனது உறவினர் நடிகர் விஜய்யிடம் வேண்டுகோள் வைத்ததாகவும் செய்திகள் பரவின.

படப்பிடிப்பு துவங்கி ஒருவாரம் கூட ஆகாத நிலையில் ‘தளபதி 64’படம் குறித்து பரபரப்பாக கிளம்பிய வதந்தி ஒன்றுக்கு அப்பட நிறுவனம் விளக்கம் வெளியிட்டுள்ளது. உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பாதீர்கள் என அப்பட தயாரிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘மாநகரம்’,’கைதி’படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 64 படப்பிடிப்பு கடந்த வாரம் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் விஜயுடன் விஜய் சேதுபதி,சாந்தனு பாக்யராஜ், பிரபல மலையாள ஹீரோ ஆண்டனி வர்கீஸ், மாளவிகா மோகனன் ஆகியோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சென்னைக்கு வெளியே ஒரு பிரபல கல்லூரி ஒன்றில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விஜய்க்கே பெரிய சம்பளம் என்னும் நிலையில் மேலும் மூன்று ஹீரோக்களை படத்தில் கமிட் பண்ணியிருப்பதால் படத்தின் துவக்கத்திலேயே தயாரிப்பாளர்  சேவியர் பிரிட்டோ அலறிவிட்டதாகவும் அதனால் அவர் தன்னை படத்திலிருந்து விடுவித்து விடும்படி தனது உறவினர் நடிகர் விஜய்யிடம் வேண்டுகோள் வைத்ததாகவும் செய்திகள் பரவின. தற்போது அச்செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து தங்களது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள அந்நிறுவனம்,... இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான நெகடிவ் செய்திகளை தயவு செய்து பரப்பாதீர்கள். படப்பிடிப்பு நல்லபடியாக நடந்துகொண்டிருக்கிறது. முதல் ஷெட்யூலை விரைவில் முடிக்கவிருக்கிறோம்’என்று பதிவிட்டுள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!