’பிகில்’படத்தோட லாப நஷ்டக் கணக்கு தெரிஞ்சுக்கணுமா?...கொஞ்சம் இங்க வாங்க பாஸ்...

By Muthurama LingamFirst Published Oct 14, 2019, 4:15 PM IST
Highlights

“படத்தின் கதையை அவர் சொன்னபோதே இதன் பிரமாண்டம் பற்றி என் அப்பா கல்பாத்தி அகோரம் புரிந்து கொண்டார். அப்போதே இது குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் அடங்காது என்று முடிவு செய்து விட்டோம். அதனால், எதிர்பார்த்த பட்ஜெட்டுக்கு மேல் போனபோது அதன் நியாயம் கருதி அதற்கு நாங்கள் உடன்பட்டோம்..!”

பிகில் படத்தின் பட்ஜெட் இயக்குநர் அட்லி சொன்னதை விட மிகவும் அதிகமாக ஆனதால் தயாரிப்பு நிறுவனத்துக்கு பல கோடிகள் நஷ்டம் வரும் என்று சொல்லப்பட்ட நிலையில், அப்படத்தின் மூலம் அவர்கள் 20 கோடிக்கும் மேல் லாபம் சம்பாதித்திருப்பதாக விநியோகஸ்தர் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் துவக்கத்திலிருந்தே பயங்கர ஆடம்பரமாக ஷங்கர் படம் போல் இஷ்டத்துக்கு அட்லி செலவழித்தார் என்று கூறப்பட்டது. இதற்கு முந்தைய படங்களில் சில கோடிகளை மட்டுமே இழந்து வந்த ஏ.ஜி.எஸ்.நிறுவனம் இப்படத்தில் மட்டும் சுமார் 20 கோடி வரை நஷ்டப்படும் என்று சொல்லப்பட்டது. இதற்கு ஆதாரமாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூட நிர்வாகத்தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி,’“படத்தின் கதையை அவர் சொன்னபோதே இதன் பிரமாண்டம் பற்றி என் அப்பா கல்பாத்தி அகோரம் புரிந்து கொண்டார். அப்போதே இது குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் அடங்காது என்று முடிவு செய்து விட்டோம். அதனால், எதிர்பார்த்த பட்ஜெட்டுக்கு மேல் போனபோது அதன் நியாயம் கருதி அதற்கு நாங்கள் உடன்பட்டோம்..!” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் அத்தனை வியாபார விபரங்கள் அத்தனையையும் புட்டுப்புட்டு வைத்திருக்கும் வட இந்திய இணையதளம் ஒன்று ‘பிகில்’படம் மூலம் ஏ.ஜி.எஸ் நிறுவனம் ரூ 20கோடி வரை லாபம் சம்பாதித்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. 

அதில் தியேட்டர் உரிமைகள் தமிழ்நாடு மட்டும் ...72 கோடி,  ஆந்திரா...8கோடி,...கேரளா,கர்நாடகா ...14 கோடி,....வெளிநாட்டு உரிமைகள்....24 கோடி,...சாடிலைட் மற்றும் டிஜிடல் ரைட்ஸ்...50 கோடி,....மியூசிக் ரைட்ஸ்...2 கோடி, இந்தி டப்பிங் ரைட்ஸ்...28கோடி, படத்தில் இடம்பெறும் விளம்பரங்களுக்கான வருமானம் ...2கோடி என்று ரூ 200 கோடி வரை படம் சம்பாதித்துக்கொடுத்திருப்பதாகவும், படத்துக்கு விஜய் சம்பளமும் சேர்த்து 180 கோடிதான் செலவாகியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. படம் ஹிட் ஆனால் இந்த நிலவரம் ஓ.கே. ஆனால் ‘சுறா’,’வில்லு’,’ஜில்லா’போல ஊத்திக்கொண்டால் ...மிகப்பெரிய தொகையாக காட்சி அளிக்கிறதே தமிழ் நாடு தியேட்டர் உரிமை, அவர்கள் எல்லாம் தயாரிப்பாளர் வீட்டு வாசலில் வந்து பிகில் ஊதுவார்கள்.

click me!