புத்தாண்டில் முதல் சோகம்... பிரபல தயாரிப்பாளர் உடல் நலக்குறைவால் மரணம்...!

Published : Jan 02, 2021, 10:19 AM IST
புத்தாண்டில் முதல் சோகம்... பிரபல தயாரிப்பாளர் உடல் நலக்குறைவால் மரணம்...!

சுருக்கம்

அங்கு அவருக்கு உடல் நிலை மேலும் மோசமானதை அடுத்து தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். 

பி.வாசு இயக்கத்தில் குஷ்பு, பிரபு நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் சின்னத்தம்பி. இந்த படத்தை கே.பி.பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.பி.பாலு தயாரித்திருந்தார். அத்தோடு மட்டுமின்றி சரத்குமாரின் ஜானகிராமன், பாண்டித்துரை உட்பட சுமார் 15-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். கே.பி.பாலு கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு உடல் நிலை மேலும் மோசமானதை அடுத்து தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். 

சமீபத்தில் நடந்த திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட இவர், அதில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கே.பி.பாலுவின் மறைவிற்கு ராதிகா, சரத்குமார் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர். 


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிரகாஷ் ராஜின் வாக்குரிமை பறிக்கப்பட்டதா? SIR நடவடிக்கையில் நடந்தது என்ன? வீடியோவால் வெடித்த சர்ச்சை
Siragadikka Aasai : மனோஜின் இரண்டாவது திருமணம் அம்பலமாகுமா? முத்து-மீனா பார்த்த காட்சியால் எதிர்பார்ப்பு