ஆபாச படமெடுத்ததால் இயக்குநருக்கு நடந்த சோதனை... அறுபதில் இருபதுக்கு ஆசைப்பட்டதால் விபரீதம்..!

Published : Jan 01, 2021, 05:26 PM IST
ஆபாச படமெடுத்ததால் இயக்குநருக்கு நடந்த சோதனை... அறுபதில் இருபதுக்கு ஆசைப்பட்டதால் விபரீதம்..!

சுருக்கம்

இயக்குநர் வேலு பிரபாகரன் தமிழ்ச்சினிமாவின் வித்தியாசமான முகம். கடவுளை மறுப்பார். பின்னர் திருச்செந்தூர் சென்று சிவனின் மைந்தனை வணங்குவார். 

இயக்குநர் வேலு பிரபாகரன் தமிழ்ச்சினிமாவின் வித்தியாசமான முகம். கடவுளை மறுப்பார். பின்னர் திருச்செந்தூர் சென்று சிவனின் மைந்தனை வணங்குவார். புதுமை விரும்பி என்பதைக்காட்ட தன்னை விட வயதில் மிகவும் குறைந்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்வார்

.

சினிமாவில் இருக்கிற  முரட்டுத்தனமான சிந்தனையாளர். இவரது அடுத்த படத்தில் நடிப்பதற்காக நடிகையை தேடி அலைந்தது பற்றிய முக நூல் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘’எனது படத்தில் எந்த நடிகையும், புது முகமாக இருந்தாலும் நடிக்க மறுப்பது வேடிக்கை, பல நேரங்களில் வேதனை தருகிறது. இத்தனைக்கும் ஒரு புரட்சிக்காரனை தேடி பிடிக்கும் பெண் ஐபிஎஸ் வேடம்.

ஒரு வருடமாக பலரை கேட்கிறேன் நெருங்கி வந்தாலும் கடைசியில் ஹூம், இந்த நாடும் இங்கே மலிந்து இருக்கும் காமடி விமர்சகர்களும், முட்டாள் சினிமாக்காரன்களும், அறிவற்ற ஊடகங்களும் செய்து வைத்து இருக்கும் வேலை. நான் ஆபாச படம் எடுக்கும் இயக்குனர் என்பதை பரப்பி இருப்பது... பரவாயில்லை. பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்க துணிந்து விட்டால் எல்லாவற்றையும் எதிர் கொள்ள வேண்டியதுதான்.

அருமையான புரிதல்கள் கொண்ட கவிதா அவர்கள் இணைந்து இருக்கிறார்... Kavitha .. and .saif..We wil rock..”என்று எழுதியிருக்கிறார். பின்னே ட்ரெஸ்ஸே போடாமல் தனது படத்தில் நடிக்க வைத்த நடிகயை இந்த வயதில் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டால் எந்த நடிகைதான் உங்கள் படத்தில் நடிக்க முன் வருவார்கள் என நெட்டிசன்கள் பதில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரோகிணிக்குள் நுழைந்த ஆவி - அதிர்ச்சியில் மனோஜ்! 'சிறகடிக்க ஆசை' சீரியல் லேட்டஸ்ட் அப்டேட்!
டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்; வச்சான் பாரு ஆப்பு; பிக் பாஸில் வெளியேற்றப்படும் போட்டியாளர் இவரா?