’சர்ச்சையில் சிக்கிய கவிஞர் ஃபிரான்சிஸ் கிருபாவுக்கு பாடல்கள் எழுத வாய்ப்பு’...தயாரிப்பாளரின் தாராள மனசு...

By Muthurama LingamFirst Published May 12, 2019, 12:47 PM IST
Highlights

சமீபத்தில் கொலை வழக்கு சர்ச்சையில் ஈடுபட்டு பின்னர் நிரபராதி என்று அதே நாளில் விடுவிக்கப்பட்ட கவிஞர் ஃபிரான்சிஸ் கிருபாவுக்கு தனது நிறுவனம் தொடர்ந்து பாடல்கள் எழுத வாய்ப்பளித்து கைதூக்கிவிட விருபுவதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.

’கன்னி’ என்ற விருதுபெற்ற நாவலையும் ‘மல்லிகைக் கிழமைகள்’,’ஏழுவால் நட்சத்திரம்’ உட்பட சில கவிதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ள ஃபிரான்சிஸ் கிருபா கடந்த வாரம் நண்பகல் ஒரு கொலை வழக்கு தொடர்பாக கோயம்பேடு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். ஆனால் வலிப்பு நோய் காரணமாக கீழே விழுந்து அடிப்பட்டு துடித்துக் கொண்டிருந்த ஒருவரைக் கண்டு பதறி தன் மடியில் வைத்து பிரான்சிஸ் கிருபா அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சித்திருக்கிறார் என்று  சிசிடிவி கேமரா மூலம் தெரிந்துகொண்ட  காவல்துறையினர் உடனே அவரை விடுதலை செய்தனர்.

அந்த நிகழ்வில் இயக்குநர் லெனின் பாரதி, பத்திரிகையாளர் கவின் மலர், கவிஞர் யூமா வாசுகி, நடிகர் ராமச்சந்திரன், சமூக செயற்பாட்டாளர் ஆன்மன் உட்பல இருபதுக்கும் மேற்பட்ட நண்பர்கள் ஃபிரான்சிஸ் கிருபாவுக்கு தோள்கொடுத்து நின்றனர். இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர் ஞானவேல் ராஜா ‘ கலைஞர்கள் வீழ்ந்து எழுவதென்பது சகஜம். கவிஞர் ஃபிரான்சிஸ் கிருபா தனது அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்க நாங்கள் உதவ முன்வருகிறோம்.எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படங்களில் தொடர்ந்து அவருக்கு பாடல்கள் எழுத வாய்ப்பு தரத் தயாராக இருக்கிறோம்’ என்று அறிவித்துள்ளார்.

click me!