“வலிமை” குறித்து வாய் திறந்த போனிகபூர்... அதிகாரப்பூர்வ அப்டேட்டால் ஹேப்பியான தல ஃபேன்ஸ்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Feb 15, 2021, 03:27 PM IST
“வலிமை” குறித்து வாய் திறந்த போனிகபூர்... அதிகாரப்பூர்வ அப்டேட்டால் ஹேப்பியான தல ஃபேன்ஸ்...!

சுருக்கம்

சமீபத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் கூட வலிமை அப்டேட் கேட்டு தல அஜித் ரசிகர்கள் கூச்சலிட்டது சோசியல் மீடியாவில் பல விமர்சனங்களை உருவாக்கியது. 

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியை அடுத்து தல அஜித், ஹெச்.வினோத், போனிகபூர் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் வலிமை. அஜித்தின் 60வது படமாக தயாராகி வரும் இதில், அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மற்ற நடிகர், நடிகைகளைப் பற்றியோ, படத்தின் ஷூட்டிங் பற்றியோ எவ்வித அப்டேட்டையும் வெளியிடாமல் படக்குழு ரகசியம் காத்து வருகிறது. 

சோசியல் மீடியாவில் விதவிதமாக ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து அப்டேட் கேட்டு வந்த தல ரசிகர்கள், பொறுமையிழந்து போனிகபூரை காணவில்லை என போஸ்டர் ஒட்டும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதுமட்டுமின்றி தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருச்செந்தூர் முருகன், பாரத பிரதமர் மோடி என பலரிடமும் வலிமை அப்டேட் கேட்டு கூச்சலிடும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வருகிறது. 

சமீபத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் கூட வலிமை அப்டேட் கேட்டு தல அஜித் ரசிகர்கள் கூச்சலிட்டது சோசியல் மீடியாவில் பல விமர்சனங்களை உருவாக்கியது. ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்பதிலேயே குறியாக உள்ளனர். இதனால் இதுவரை பொறுமை காத்து வந்த தயாரிப்பாளர் போனிகபூர், முதன் முறையாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வலிமை படம் குறித்து பதிவிட்டுள்ளார். 

அதில், வணக்கம் வலிமை படத்திற்கு நீங்கள் காட்டும் அன்பை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளதால் சற்று பொறுமையாக இருங்கள் என பதிவிட்டுள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தயாரிப்பாளர் போனிகபூரே மெளனம் கலைத்துள்ளதால், அஜித் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். ட்விட்டரில் #ValimaiUpdate #AjithKumar, #ValimaiFirstLook ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!
என் வாழ்க்கையை அழிக்க இவர்கள் ரெண்டு பேர் போதும்: மர்ம முடிச்சைப் போட்ட மயில்; யார் அந்த ரெண்டு பேர்?