தல ஃபேன்ஸ் சரியா 7 மணிக்கு ரெடியா இருங்க... போனிகபூர் கொடுத்த லேட்டஸ்ட் ‘வலிமை’ அப்டேட்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Aug 02, 2021, 01:48 PM ISTUpdated : Aug 02, 2021, 01:52 PM IST
தல ஃபேன்ஸ் சரியா 7 மணிக்கு ரெடியா இருங்க... போனிகபூர் கொடுத்த லேட்டஸ்ட் ‘வலிமை’ அப்டேட்...!

சுருக்கம்

வலிமை படத்தின் தயாரிப்பாளரான போனிகபூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

நேர்கொண்ட பார்வை படத்துக்கு பின், நடிகர் அஜித், இயக்குனர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் காம்பினேஷனில் உருவாகி வருகிறது ‘வலிமை’ திரைப்படம். இதில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஹுமா குரேஷி நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா பணியாற்றி வருகிறார். இந்தப் படத்திற்கு 2019-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி பூஜை போட்டதோடு சரி, போனிகபூர் அப்டேட் கொடுப்பதையே மறந்துவிட்டார். இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள் போனிகபூரை காணவில்லை என போஸ்டர் அடித்து ஒட்டும் அளவிற்கு சென்றனர். 

அத்தோடு பொது இடங்களில் எல்லாம் வலிமை அப்டேட் கேட்டு போர்டும் கையுமாக சுற்ற ஆரம்பித்தனர். இப்படி தல ஃபேன்ஸ் செய்த தாறுமாறு காரியங்களால் கடுப்பான அஜித், நாங்களே அப்டேட் தருவோம் அதுவரைக்கும் அமைதியாகவும், கண்ணியமாகவும் நடத்துக்கோங்க என கண்டித்தார். அதனால் சிறிது காலம் அமைதியாக இருந்தவர்கள் மீண்டும் வேலையை காட்ட ஆரம்பித்தனர். இனியும் தாமதம் செய்தால் பிரச்சனையை  சமாளிக்க முடியாது என நினைத்த வலிமை படக்குழு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, கடந்த 11ம் தேதி 6 மணிக்கு மோஷன் போஸ்டர் மற்றும் சில ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டனர். 

டிசைன் மற்றும் கிராபிக்ஸில் சில குறைகள் இருந்தாலும் ஒன்றரை வருடத்திற்கு பிறகு அப்டேட் கிடைத்ததே போதும் என தல ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாட ஆரம்பித்தனர். இந்நிலையில் இன்று காலை வலிமை படம் குறித்த மற்றொரு அப்டேட் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. அதாவது வலிமை படத்தில் இருந்து முதல் பாடலை இன்று இரவு 9 மணி முதல் 10.30க்குள் படக்குழு வெளியிட உள்ளதாக வேறு, வேறு டைம் கூறப்பட்டு வந்தது. 

இந்நிலையில் வலிமை படத்தின் தயாரிப்பாளரான போனிகபூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சோனி மியூஸிக் நிறுவனத்தின் ட்வீட்டை ரீ-ட்வீட் செய்துள்ள அவர், இன்று இரவு 7 மணிக்கு வலிமை படத்தின் முதல் சிங்கிள் வெளியாக உள்ளதை உறுதிபடுத்தியுள்ளார். இதையடுத்து சோசியல் மீடியாவில் #ValimaiFirstSingle,  #VeraMaari, #Thala, #HVinoth, #Yuvan உள்ளிட்ட பல ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

5 பேருடன் அட்ஜஸ்ட் செய்தால் பிரபல நடிகருக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு: மிர்ச்சி மாதவி ஷாக் பதிவு!
ஜன நாயகன் 2ஆவது சிங்கிள் எப்போது? இதோ வந்துருச்சுல அப்டேட்!