
பிரபல சினிமா, தொலைக்காட்சி நடிகையும் நடிகர் ரஞ்சித்தின் முன்னாள் மனைவியுமான பிரியா ராமன் மிகவிரைவில் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாகவும் அவர் விரைவில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்கவிருப்பதாகவும் நம்பத்தகுந்த செய்திகள் நடமாடுகின்றன.
ரஜினிகாந்த் கதை எழுதி தயாரித்த ’வள்ளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் பிரியா ராமன். தொடர்ந்து சூர்யவம்சம், சின்ன ராஜா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தமிழ்,தெலுங்கு,மலையாளப்படங்களில் நடித்தார். 199ம் ஆண்டு வெளியான ’நேசம் புதுசு’ படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் ரஞ்சித்தை காதலித்து திருமணம் செய்துகொண்டவர் அத்தோடு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.
தற்போது தமிழ், மலையாளத் தொலைக்காட்சி தொடர்களில் பிசியாக நடித்து வரும் பிரியா ராமன், நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.இந்நிலையில் பிரியா ராமன், பா.ஜனதாவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் திருப்பதி தரிசனத்துக்கு சென்றிருந்த பிரியா ராமனை ஆந்திராவில் உள்ள பா.ஜனதா பிரமுகர்கள் நேரில் சென்று வரவேற்றுள்ளனர். அவர்களைச் சந்தித்தபின் தான் பா.ஜனதாவில் இணைவதை அவரே உறுதிபடுத்தியுள்ளார். மிக விரைவில் பிரதமர் மோடியை சந்தித்து தன்னை இணைத்துக்கொள்ளவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பிரியா ராமனின் முன்னாள் கணவரான ரஞ்சித் சில நாட்களுக்கு முன்பு பா.ம.க.வில் இணைந்தார். பின்னர் கட்சி தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் திமுகவில் சேர்ந்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.