
குஜராத் மாநிலம் மெஹசானா மாட்டத்தில் உள்ள லங்னாஜ் காவல் நிலையத்தில் ,அர்பிதா சவுத்ரி என்ற பெண் காவலர் பணியாற்றி வருகிறார். டிக் டாக் செயலியில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், அடிக்கடி திரைப்பட பாடல்களுக்கு, நடனமாடியும், பாடல்கள் பாடியும் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இவர், அழகாக இருப்பதால் இவர் பதிவிடும் வீடியோக்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் காவல் நிலையத்திலும் இவர் டிக் டாக் செய்யும் அளவிற்கு இவருக்கு ஆர்வம் அதிகரித்தது.
அந்த வகையில் அர்பிதா, காவல் நிலையத்தில் சீருடையில் இல்லாமல், லாக் அப் அருகில் நின்று இந்தி பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை. டிக் டாக் செயலியில் பதிவிட்டுள்ளார் . இதையடுத்து அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.
காவல் நிலையத்திற்குள் பெண் காவலர் இவ்வாறு நடந்து கொண்டதற்கு எதிராக பல்வேறு கண்டனங்கள் எழுந்தது. இதனை வெளிப்படையாகவே சமுக வலைத்தளங்களில் பலர் விமர்சித்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது உள்ளது . இதையடுத்து பணி நேரத்தில் சீருடையில் இல்லாமல், லாக் அப்பின் அருகிலேயே நின்று சீருடை அணியாமல், காவலர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நடவடிக்கைகளை பின்பற்றாமல் இருந்த காரணத்திற்காக காவலர் அர்பிதா சவுத்ரியை, சஸ்பெண்ட் செய்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் மஞ்சிதா உத்தரவிட்டுள்ளார்.
எனினும் இந்த பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும், இவரின் டிக்டாக் வீடியோவிற்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.