
நடிகை பிரியங்கா சோப்ரா தான் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் தளபதி விஜய்யை பற்றி எழுதியுள்ள தகவலை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2000ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றவர். பின்னர் தமிழில் இயக்குனர் மஜித் இயக்கய 'தமிழன்' திரைப்படம் மூலம், ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் பல பாலிவுட் படங்களில் நடிக்கத் துவங்கி, முன்னணி கதாநாயகியாக மாறினார்.
பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்து வந்ததால், தமிழில் நடிக்க கிடைத்த வாய்ப்புகளை அவரால் ஏற்க முடியவில்லை. தற்போது பாலிவுட் தாண்டி ஹாலிவுட் வரை பிரபலமாகிவிட்ட பிரியங்கா சோப்ரா, கடந்த 2018 ஆம் ஆண்டு தன்னை விட 10 வயது சிறியவராக அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
எப்போதும் பிஸியாகவே இயங்கிக் கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ரா, 'அன்ஃபினிஷ்டு' என்ற தலைப்பில் தன்னுடைய சுயசரிதையை புத்தகமாக எழுதி வருகிறார். அதில் பொதுவாக தான் வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்கள், திரையுலகில் கிடைத்த நல்ல மற்றும் கெட்ட அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த சுய சரிதை புத்தகத்தில் தன்னுடைய முதல் பட ஹீரோவாக விஜய் பற்றியும் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ளதாவது, "விஜய்யின் பணிவு மற்றும் ரசிகர்களுடனான அவரது தாராள மனப்பான்மை, அவர் மீது எனக்கு ஒரு நீடித்த தோற்றத்தை ஏற்படுத்தியது" என்று குறிப்பிட்டுள்ளார் பிரியங்கா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.