
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், 'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து மீண்டும் தளபதி விஜய்யை வைத்து மற்றொரு படத்தை இயக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படும் தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய முதல் படமான 'மாநகரம்' படத்திலேயே வித்தியாசமான கதையை இயக்கி மொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். இதைத்தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து இயக்கிய 'கைதி' திரைப்படத்தை, ஹீரோயின், பாடல்கள் போன்றவை இல்லாமல் வித்தியாசமான திரில்லர் படமாக இயக்கி ஒட்டுமொத்த திரையுலகையும் மிரட்டினார்.
இவரது திறமைக்கு மூன்றாவது படத்திலேயே யாருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம் இவருக்கு கிடைத்தது. அதாவது தளபதி விஜய்யை வைத்து 'மாஸ்டர்' படத்தை இயக்கினார். கடந்த ஆண்டு வெளியாக வேண்டிய 'மாஸ்டர்' திரைப்படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொங்கல் ரிலீசாக வெளியானது.
இந்த படம் வெளியான இரண்டு நாட்களிலேயே சுமார் 200 கோடி வசூல் செய்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. 'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் நடிகர் கமலஹாசனை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கும் பணியில் இறங்கினார். ஆனால் தற்போது நடிகர் கமல்ஹாசன் அவருடைய அரசியல் பணியில் தன்னுடைய முழு ஆர்வத்தையும் காட்டி வருவதால், 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் சற்று தாமதமாகி உள்ளது.
எனவே கமல் மீண்டும் திரைப்படத்தில் நடிக்க வருவதற்கு முன் விஜய்சேதுபதியை வைத்து ஒரு படத்தை, லோகேஷ் கனகராஜ் இயக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்கி முடித்து முடித்தபின், கமலின் 'விக்ரம்' படத்தை முடித்துவிட்டு மீண்டும் தளபதி விஜய்யை வைத்து மற்றொரு படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் பக்கா ப்ளான் போட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது ஆனால் இதுகுறித்து தற்போது வரை எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.