Bigg Boss Priyanka : நட்பே துணை... நடுரோட்டில் பிக்பாஸ் நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் பிரியங்கா

Kanmani P   | Asianet News
Published : Mar 10, 2022, 04:58 PM IST
Bigg Boss Priyanka : நட்பே துணை... நடுரோட்டில் பிக்பாஸ் நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் பிரியங்கா

சுருக்கம்

Bigg Boss Priyanka : சமீபத்தில் நண்பர்களுடன் அவுட்டிங் சென்ற போட்டோக்களை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் நடுரோட்டில் அபிஷேக், வருண், பாவனி, சிபி உடன் பிரியங்கா என்ஜாய் பண்ணும் போட்டோக்கள் வெளியாகியுள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சி :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி பட்டி தொட்டியெல்லாம் பிரபலம். அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட நிகழ்ச்சியும் இது தான். இதுவரை 5 சீசன்களை கடந்து வெற்றி நடைபோட்டுள்ளது பிக்பாஸ். 100 நாட்கள் பிரபலங்களின் வாழ்க்கை பயணத்தை ஒளிவு மறைவின்றி காட்டுவதே பிக்பாஸின் வேலையாகும்.

பிரபலங்களும் பிக்பாஸும் :

பெரும்பாலும் தங்களுக்கென தனி அடையாளம் கிடைக்குமென்கிற நம்பிக்கையில் 100 நாள் சேலஞ்சை ஏற்று போட்டியாளர்கள் உள்ளே வருகின்றனர். அவர்களுக்கான கணிசமான சம்பளமும் வழங்கப்படுகிறது. பொதுவாக சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ள நபர்களை போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.  

மேலும் செய்திகளுக்கு...Priyanka : பிக்பாஸில் கணவர் குறித்து வாயே திறக்காத பிரியங்கா.. இவ்ளோ பிரச்சனை இருக்கா? - உண்மை பின்னணி இதுதான் 

விஜய் டிவி பிரபலங்கள் :

வெளியில் இருந்தது பிரபலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் விஜய் டிவி பிரபலங்களும் உள்ளிறக்கத்தான் படுகிறார்கள். அதன்படி தாடி பாலாஜி, ரியோ ராஜ், அறந்தாங்கி நிஷா, கவின், பிரியங்கா, ராஜு உள்ளிட்டோர் போட்டியாளராக களம் கண்டனர். இவர்களில் கடைசியாக நடந்து முடிந்த 5 வது சீசனில் ராஜு முதல் இடத்தையும், பிரியங்கா இரண்டாம் இடத்தையும் தட்டி சென்றனர்.

மேலும் செய்திகளுக்கு...bigg boss priyanka :பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து மனம் திறந்த பிரியங்கா..என்ன சொன்னார் தெரியுமா?

பிரியங்காவின் சம்பளம் : 

கடைசி சீசனில் ராஜு டைட்டில் வின்னராக இருந்தாலும், அவரைவிட அதிக சம்பளம் பெற்றது என்னமோ பிரியங்கா தான். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் மிகவும் பிரபலமான தொகுப்பாளராக இருந்ததால், இவருக்கு ஒரு வாரத்துக்கு ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் 16 வாரத்துக்கு ரூ.32 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளாராம். 

நண்பர்களுடன் பிரியங்கா :

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு நண்பர்களுடன் அடிக்கடி வெளியில் செல்லும் பிரியங்கா. அதுகுறித்த போட்டோக்களையும் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் நண்பர்களுடன் அவுட்டிங் சென்ற போட்டோக்களை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் நடுரோட்டில் அபிஷேக், வருண், பாவனி, சிபி உடன் பிரியங்கா என்ஜாய் பண்ணும் போட்டோக்கள் வெளியாகியுள்ளது.  

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?