
பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சி :
இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் கலக்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பட்டி தொட்டியெல்லாம் பரவி கிடக்கிறது. ஏகபோக ரசிகர் பட்டாளத்தை தட்டி தூக்கிய விஜய் சீரிஸில் முதன்மையில் இருப்பது பிக் பாஸ் தான். இல்லத்தரசிகள் முதல் இளசுகள் வரை பிக்பாஸ் வசம் எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர்.
24 மணி நேரமும் பிக்பாஸ் அல்டிமேட் :
வெறும் 1 மணி நேரம் பிக்பாஸ் ஒளிபரப்பாகி வந்த நிலையில் போதிய உண்மைகள் ஒளிபரப்படவில்லை என ரசிகர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து ஓடிடி தளத்தில் ஒளிபரப்ப முடிவு செய்த பிக்பாஸ் நிறுவனம் அதற்கான பிரமாண்ட ப்ரோமோக்களுடன் நிகழ்ச்சியை அறிமுகம் செய்தது. 14 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் அல்டிமேட் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளுக்கு... BiggBoss Ultimate: என்ன தாமரை என்கிட்டயே வா...! வந்ததும் வேலையை காட்டிய விஷ பாட்டில்...விளாசும் நெட்டிசன்கள் !
கமலுக்கு பதில் சிம்பு :
பிக்பாஸ் சீரிஸ் போலவே அல்டிமேட்டையும் கமலே தொகுத்து வழங்கி வந்தார். இதையடுத்து படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள வேண்டிய பணி இருப்பதாக கூறி கமல் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். கமல் விலகியதை தொடர்ந்து அந்த இடத்தை சிம்பு அலங்கரித்து வருகிறார்.
வைல்ட் கார்ட் என்ட்ரி :
வனிதா சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறியதை அடுத்து முன்னதாக எலிமினேட் ஆனா சுரேஷ் சக்கரவர்த்தியை சுவாரஸ்யத்திற்காக மீண்டும் களமிறங்கியது பிக்பாஸ். இதையடுத்து வைல்ட் கார்ட் எண்ட்ரியாக விஜய் டிவி பிரபலம் சதீஸ் மற்றும் நேற்று ரம்யா பாண்டியன் உள்நுழைந்துள்ளார்.
எதிர்பார்ப்பை எகிற வைத்த விஜய் டிவி பிரபலம் :
ஒவ்வொரு சீசனிலும் வரும் விஜய் டிவி பிரபலங்கள் கட்டாயம் என்டர்டெய்ன் செய்வார்கள் என ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கை உண்டு. அதன்படி. முன்னதாகா களம் கண்ட தாடி பாலாஜி, கவின்,ரியோ ராஜ், அறந்தாங்கி நிஷா, இறுதியாக ப்ரியங்கா ஆகியோர் தங்களது பங்களிப்பை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்திருந்தனர். ஆனால் இந்த முறை இறக்கப்பட்டுள்ள கலக்கப் போவது யாரு செலிபிரெட்டி சதீஷ் ஏனோதானோ என்று இருந்து வருவது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு...லாஸ்லியா எங்க டா... சர்ப்ரைஸ் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பிரபல ஹீரோயின்!
சதீஷின் மெத்தன போக்கு :
இந்நிலையில் இன்று இவங்க இப்படித்தான் டஸ்கில் போட்டியாளர்களின் குணாதிசயம் குறித்து தெரிவிக்கும் படி போட்டியாளர்களிடம் கூறப்படுகிறது. இதில் போறவரைக்கும் போவோம் என நினைப்பவர் யார் என கேட்கப்படுகிறது. அதற்கு பெரும்பாலான போட்டியாளர்கள் சதீஷ் போட்டோவை காட்டுகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.