Iswarya dance: கர்ப்பமான வயிறுடன் குழந்தை வெளியே வரும் அளவிற்கு...குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை ஐஸ்வர்யா..!

Anija Kannan   | Asianet News
Published : Mar 10, 2022, 12:10 PM ISTUpdated : Mar 10, 2022, 12:12 PM IST
Iswarya dance: கர்ப்பமான வயிறுடன் குழந்தை வெளியே வரும் அளவிற்கு...குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை  ஐஸ்வர்யா..!

சுருக்கம்

Iswarya prabakar dance: குழந்தை அதிக எதிர்ப்பு சக்தி பெறுவதற்கு கர்ப்பிணிகள் ஆக்டிவாக இருக்க வேண்டும் என்று கூறி, கர்ப்பமான வயிறுடன் செம குத்தாட்டம்  போட்ட சீரியல் நடிகை ஐஸ்வர்யாவின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

குழந்தை அதிக எதிர்ப்பு சக்தி பெறுவதற்கு கர்ப்பிணிகள் ஆக்டிவாக இருக்க வேண்டும் என்று கூறி, கர்ப்பமான வயிறுடன் செம குத்தாட்டம்  போட்ட சீரியல் நடிகை ஐஸ்வர்யாவின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 இன்றைய நவீன உலகில், பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள எல்லாவற்றிக்கும் ஆன்லைனில் பதிவிடுவது, ட்ரெண்ட் ஆகி வருகிறது. அப்படியாக உலகின், எங்கோ ஒரு மூலையில் நெகிழ்ச்சியான, சில விசித்திரமான,வேடிக்கையான, சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. அவை சில சமயங்களில், நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும், சில வீடியோ நமக்கு கோபத்தை தூண்டும், சிலவற்றை நாம் ஆச்சரியமாக கண்டு ரசிப்போம்.
சினிமா பிரபலங்கள் முதல் சீரியல் பிரபலங்கள் வரை  சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து அவ்வப்போது ரீலிஸ்

வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில், தற்போது சீரியல் நடிகை ஐஸ்வர்யா இணைத்துள்ளார். ஆனால், இவர் நிறைமாத கர்பத்துடன் போட்ட குத்தாட்டம் பார்வையாளர்களை கத்தி கலங்க வைத்துள்ளது. அந்த வீடியோவை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

நடிகை ஐஸ்வர்யா யார்..?

நடிகை ஐஸ்வர்யா சன் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். அவற்றில், சூப்பர் குடும்பம், மகாபாரதம், சந்திரலேகா, பைரவி  போன்ற சீரியல்கள் ஹிட் அடித்தவையாகும்.  
அதுமட்டுமின்றி, இவர் விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன், சூப்பர சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளிலும்கலந்து கொண்டிருக்கிறார். இதோடு விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 சீசன் 3 நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் நடனம் ஆடியுள்ளார். 7C தொடரிலும் விஜய் டிவியில் நடித்துள்ளார்.

திருணத்திற்கு பிறகு  அமெரிக்காவிற்கு சென்றார் ஐஸ்வர்யா :

கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்ட இவர் இந்தியாவில் இல்லாமல் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு 2021 ஆம் ஆண்டு பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது. இந்நிலையில், தான் தன்னுடைய முதல் குழந்தையின் கர்ப்பகாலத்தின் போது நடனம் ஆடிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டதோடு, பெண்கள் ஆரோக்கியமாக இருக்க எப்போதும் ஆக்டிவ்வா இருக்கணும் என்று கூறியுள்ளார். மேலும், சுறுசுறுப்பான தாயின் குழந்தைகளுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் IQ உள்ளது என்றும் ஆராய்ச்சி காட்டுகிறது. எனவே நான் அதைப்பின்பற்றுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இதோ அந்த வீடியோ...

இந்த வீடியோ பார்த்த நெட்டிசன்கள் ஷாக் ஆகி வருகின்றனர். சமீபத்தில் கூட குழந்தை பெற்று கொள்வது எப்படி என்று பார்த்து, பெண் ஒருவர் குழந்தை பெற்று கொள்ள முயற்சி செய்தி இறுதியில் ஆபத்தில் முடிந்தது நம் அனைவருக்கும் தெரியும். இது போன்ற வீடியோக்கள் நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று பலர் கூறுகின்றனர். இருப்பினும், சிலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க...Kamal: விருமாண்டி 2-விற்கு எனக்கு இந்த இயக்குனர் தான் வேணும்...அடம் பிடிக்கும் கமல்! இயக்குனர் யார் தெரியுமா?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்