
பிக்பாஸ் வீட்டுக்குள் புது எண்ட்ரியாக நடிகை ரம்யா பாண்டியன் நேற்று வந்துள்ளார். வந்தவுடன் தாமரையுடன் வம்பிழுத்துள்ளார்.பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக் பிரதர் நிகழ்ச்சியை மையமாக கொண்டு, உருவாக்கப்பட்ட ''பிக் பாஸ்'' நிகழ்ச்சி. ஹிந்தியை தொடர்ந்து தமிழ், தெலுங்கு,மலையாளம் போன்றவற்றில் வெற்றி கரமாக ஓடி கொண்டிருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த 5 சீசன்களின் வெற்றியை தொடர்ந்து, தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகச்சியாக 24 மணிநேரமும் ஒளிபரப்பப்படுகிறது.
கமலுக்கு பதில் சிம்பு:
முதலில், பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசன்களையும் கமல் மூலம் தொகுத்து வழங்கப்பட்டது. தற்போது, பிக்பாஸ் அல்டிமேட் நிகச்சியையும் கமல் வழங்கி வந்த நிலையில், விக்ரம் படம் தொடர்பான பணிகள் இருப்பதாக கூறி நிகச்சியில் இருந்து விலகினார். இதையடுத்து, கடந்த இரண்டு வாரங்களாக தற்போது, சிம்பு அவர்களால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது, பிக் பாஸ் வீட்டில் சினேகன், நிரூப்,பாலா,சுரேஷ்,சதீஷ், அனிதா, தாமரை, அபிராமி, சுருதி, ரம்யா பாண்டியன் என 10 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இதில்,தாடிபாலாஜி, ஷாரிக், அபிநய், வனிதா ஆகிய 4 பேர் எலிமினேட் செய்யப்பட்டனர். இதுதவிர கலக்கப்போவது யாரு பிரபலம் சதீஷ் கடந்த வாரம் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார்.
புது எண்ட்ரியாக நடிகை ரம்யா பாண்டியன்:
இந்த வாரத்திற்கான வெளியேற்ற பட்டியலில் சினேகன், ஜூலி, சுருதி மற்றும் பாலாஜி முருகதாஸ் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் புது எண்ட்ரியாக நடிகை ரம்யா பாண்டியன் நேற்று உள்ளே வந்துள்ளார். நேற்று ரம்யா பாண்டியன் ரசிகர் ஒருவர் உள்ளே போய் எங்கள் பெயரை காப்பாற்ற வேண்டும் என்று கூறியது வைரலானது.
''விஷபாட்டில்'' ரம்யாபாண்டியன்..!
இதை தொடர்ந்து, தற்போது, பிக் பாஸ் 4 வது சீசனில் விஷபாட்டில் என்று ரம்யாபாண்டியன் பெயர் சொல்லி அழைக்கப்பட்டார். அதை உண்மையாக்கும் விதமாக தற்போது ரம்யா பாண்டியன், நேற்று உள்ளே சென்றதும் என்ன கேம் விளையாடுறீங்க...? கேம்ல ஒரு சுவாரசியமே இல்லை...! யாருமே கேம்மை சரியா விளையாடவில்லை என்று கூறியுள்ளார். உடனே, நம்ப தாமரை அக்கா விடுவாங்களா அவங்க சரமாரி கேள்வியை கேட்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் ரம்யா பாண்டியன் 4 வது சீசனில் பண்ணிய வேலையை திரும்பவும் பண்ண ஆரமிச்சுட்டாங்க என்று கூறி வருகின்றனர்.
என்ன தாமரை என்கிட்டயேவா... இனி உனக்கு இருக்கு என்று ரம்யா பாண்டியன் கூறுவது போன்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ரம்யா பாண்டியன், மேலும், பிக் பாஸ் 4 வது சீசனில் ஏகப்பட்ட விஷத்தை கக்கி நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் கூட்டியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.