"நீ நான் கேட்க மறந்த இசை'... அழகிய வரிகளோடு நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரியாபவானி ஷங்கர்! யாருடன் தெரியுமா?

Published : Jan 27, 2020, 11:48 AM IST
"நீ நான் கேட்க மறந்த இசை'... அழகிய வரிகளோடு நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரியாபவானி ஷங்கர்! யாருடன் தெரியுமா?

சுருக்கம்

செய்திவாசிப்பாளராக தமிழ் மக்களுக்கு அறிமுகமாகி, பின் சின்னத்திரை நடிகை, தொகுப்பாளினி என தன்னுடைய திறமையை மெருகேற்றி கொண்டு வெள்ளித்திரையில் கதாநாயகியாக கலக்கி வருபவர், நடிகை பிரியாபவானி ஷங்கர்.  

செய்திவாசிப்பாளராக தமிழ் மக்களுக்கு அறிமுகமாகி, பின் சின்னத்திரை நடிகை, தொகுப்பாளினி என தன்னுடைய திறமையை மெருகேற்றி கொண்டு வெள்ளித்திரையில் கதாநாயகியாக கலக்கி வருபவர், நடிகை பிரியாபவானி ஷங்கர்.

இவர் சமீபத்தில் நடித்த அணைத்து படங்களும் தொடர்ந்து, ஹிட் அடித்து கொண்டே வருவதால், அம்மணி காட்டில் பட மழை பொழிந்து வருகிறது. அந்த வகையில் தற்போது உலகநாயகன் கமலஹாசன் நடித்து வரும் 'இந்தியன்' 2  படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர், ராஜ்வேல் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்தாலும்,  இதனை ஒரு முறை கூட பிரியாபவானி வெளிப்படையாக கூறியதே இல்லை. ஆனால் இருவரும் இணைந்து எடுத்து  கொண்ட புகைப்படங்கள், சமூக வலைத்தளத்தில் அதிகம் வட்டமிட்டு வருவது அனைவரும் அறிந்ததே.

தற்போது பிறந்தநாள் கொண்டாடும் ராஜ்வேலுக்காக அழகிய காதல் பொங்கும் வரிகளால்... பிரியாபவானி இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 

இதில்... நீ, நான் கேட்க மறந்த இசை. காயங்களை மறக்க புதிய காதலின் கிளர்ச்சி தேவையில்லை, சூழ்நிலைக்கு மாறாத அன்பு போதும் என்றிருக்கும் பேராண்மை. எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா அவள் வாழ்க்கைல உன்னை மாதிரி ஒரு ஆண் இருக்கனும்னு நான் கடவுளை கேட்டுக்கறேன். நட்சத்திரங்கள் நிறைந்த என் உலகில் நீ என் சூரிய ஒளியாக இருக்கிறாய்! பிறந்தநாள் வாழ்த்துக்கள் மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!
அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!