எஸ்.ஜே.சூர்யாவுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த பிரியா பவானி சங்கர்...

Published : Oct 02, 2019, 09:57 AM ISTUpdated : Oct 03, 2019, 12:25 PM IST
எஸ்.ஜே.சூர்யாவுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த பிரியா பவானி சங்கர்...

சுருக்கம்

அப்படத்துக்குப் பின்னர் பிரியாவுக்கு பல வாய்ப்புகள் குவிந்தன. அவர் தற்போது 'இந்தியன் 2' படப்பிடிப்பில் மும்முரமாக உள்ளார் . அதனைத் தொடர்ந்து 'குருதி ஆட்டம்', 'களத்தில் சந்திப்போம்', 'மாஃபியா', 'கசடதபற' மற்றும் அஜய் ஞானமுத்து - விக்ரம் நடிக்கும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் பட்டியலில் தற்போது ராதா மோகன் - எஸ்.ஜே.சூர்யா படமும் இணைந்துள்ளது.  

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா பிரபல இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் இரண்டாவது முறையாக அவருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் பிரியா பவானி சங்கர். இப்படத்துக்காக தயாரிப்பாளர் தரப்பு முதலில் அணுகியபோது தான் மிகவும் பிசியாக இருப்பதாக ச் சொல்லி மறுத்த பிரியா ஹீரோ எஸ்.ஜே.சூர்யா அன்பாகக் கேட்டுக்கொண்டதற்கிணங்க நடிக்கச் சம்மதித்தாராம்.

நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மான்ஸ்டர்'. மே 17-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப்பெற்றது.அப்படத்துக்குப் பின்னர் பிரியாவுக்கு பல வாய்ப்புகள் குவிந்தன. அவர் தற்போது 'இந்தியன் 2' படப்பிடிப்பில் மும்முரமாக உள்ளார் . அதனைத் தொடர்ந்து 'குருதி ஆட்டம்', 'களத்தில் சந்திப்போம்', 'மாஃபியா', 'கசடதபற' மற்றும் அஜய் ஞானமுத்து - விக்ரம் நடிக்கும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் பட்டியலில் தற்போது ராதா மோகன் - எஸ்.ஜே.சூர்யா படமும் இணைந்துள்ளது.

துவக்கத்தில் தனது பிசி கமிட்மெண்டுகளை இப்படத்தைத் தவிர்த்தாராம் பிரியா. பின்னர் இயக்குநர் ராதாமோகனை அழைத்துக்கொண்டு அவரது ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்ற எஸ்.ஜே.சூர்யா முழுக்கதையையும் கேட்க வைத்து சம்மதிக்க வைத்தாராம். ‘மான்ஸ்டர்’படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் ஜோடியாக நடிக்க பயமாக இருந்தது என்று அப்பட ரிலீஸுக்கு முன்னர் பிரியா பேட்டி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்பட வெற்றிக்குப் பின் சூர்யாவுடன் தொடர்ச்சியான நட்பில் இருந்ததால் அவரது சொல்லைத் தட்டமுடியாமல் இப்படத்தில் நடிக்க சம்மதித்தாராம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!