அட நம்ம பல்வாள் தேவனா இவரு !! எப்படி இருந்த ராணா இப்ப இப்படி ஆயிட்டாரே ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

Published : Oct 01, 2019, 11:46 PM IST
அட நம்ம பல்வாள் தேவனா இவரு !! எப்படி இருந்த ராணா இப்ப இப்படி ஆயிட்டாரே ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

சுருக்கம்

பாகுபலி திரைப்படத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்தில் வந்து கலக்கிய நடிகர் ராணா இன்று வெளியிட்டுள்ள படத்தில் மிக ஒல்லியாக தோற்றமளிப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

பாகுபலி, ஆரம்பம், பெங்களூரு நாட்கள் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் நடிகர் ராணா. பாகுபலி படத்தில் இவர் நடித்திருந்த பல்வாள் தேவன் என்ற கதாப்பாத்திரம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் உடம்புக்கு எந்த பிரச்சனையும் இல்லையே, உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் என நலம் விசாரித்தனர்.

முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்ததாக கூறப்பட்டது. ஆனால், அதை வதந்தி என ராணா மறுத்திருந்தார். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து கவலை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், அவர் விரத பர்வம் என்கிற தெலுங்கு படத்திற்காகத் தான் தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025-ல் பாக்ஸ் ஆபிஸ் குயின் யார்? அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 5 ஹீரோயின்ஸ் இதோ
சிங்கிள் பசங்க டைட்டில் வின்னர் யார்? பைனல்ஸில் கூமாபட்டி தங்கப்பாண்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!