
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாலசுப்ரமணியம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது வசீகர குரலால் ரசிகர்களை கவர்ந்த எஸ்.பி.பி. விரைவில் பூரண குணமடைய வேண்டுமென திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள எஸ்.பி.பி, தனக்கு லேசான காய்ச்சல், சளி தொந்தரவு இருந்ததால் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாகவும், அதில் தனக்கு மிகவும் குறைவான அளவிற்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மருத்துவர்களின் அறிவுரையின் படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொண்டிருக்கலாம், ஆனால் வீட்டில் இருப்பவர்கள் கவலை அடைவார்கள். அதனால் தான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். நான் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறேன். என்னைப் பற்றி எண்ணிரும் அஞ்ச வேண்டாம். மேலும் தனது உடல் நிலை குறித்து விசாரிப்பதற்காக பல போன் கால்கள் வருகின்றன. என்னால் அனைவரிடமும் பேச முடியவில்லை, மருத்துவர்கள் என்னை ஓய்வில் இருக்க சொல்லியுள்ளதால் யாரும் எனக்கு போன் செய்ய வேண்டாம் என கோரிக்கை விடுத்திருந்தார்.\
இந்நிலையில் எஸ்.பி.பி. சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையில் இருந்து அவருடைய உடல் நிலை குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், எஸ்.பி.பாலசுப்ரமண்யத்திற்கு தற்போது லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பதாகவும், ஆக்ஸிஜன் செறிவு நார்மலாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் உயர்மட்ட மருத்துவக்குழு கண்காணித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.