NC 22 : மாநாடு படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபுவின் NC 22-ல் இணைந்தார் பிரேம்ஜி

Published : Oct 15, 2022, 09:10 AM ISTUpdated : Oct 15, 2022, 03:10 PM IST
NC 22 : மாநாடு படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபுவின்  NC 22-ல் இணைந்தார் பிரேம்ஜி

சுருக்கம்

அரவிந்த்சாமி, பிரியாமணி மற்றும் விஸ்வநாத், சம்பத்ராஜ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக முன்னதாக வெங்கட் பிரபு அறிவித்து இருந்தார். தற்போது பிரேம் ஜியும் இணைந்துள்ளார்

சென்னை 600028 படம் மூலம் பிரபலமானவர் இயக்குனர் வெங்கட் பிரபு. பிரபல இசை அமைப்பாளர் கங்கை அமரனின் மூத்த மகனான இவர், முன்னதாக துணை வேடங்களிலேயே பல படங்களில் நடித்துள்ளார்.  சென்னை 600028 படம் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. பின்னர், மங்காத்தா, பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி, மாநாடு என அடுத்தடுத்த ஹிட் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தார். மிகவும் ஜாலியான இயக்குனர் என்று பெயர் எடுத்த இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

இவர் மூலம் அறிமுகமானநடிகர்கள் தற்போது பிரபல நடிகர்களாக இருக்கின்றனர்.  மங்காத்தா படத்தில் அஜித்குமாரை வைத்து இயக்கியிருந்தார். இதன் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பின்னர் இவர் சிம்புவை வைத்து இயக்கிய மாநாடு படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆக அமைந்தது. இந்த படம் சிம்புவிற்கும் நீண்ட நாள் கழித்து வெற்றி படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பல இன்னல்களுக்குப் பிறகு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது...

மேலும் செய்திகளுக்கு...Nayanthara : பற்றி எரியும் வாடகைத்தாய் விவகாரம்; எஸ்கேப் ஆன நயன்தாரா!!

படம் பலமுறை ஒத்திவைக்கப்பட்டு பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு துவங்கிய கடந்த ஆண்டு திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தி நல்ல வசூலையும் வாரி  கொடுத்தது. பின்னர் அடல்ட் லவ் ஸ்டோரியான மன்மத லீலை என்னும் படத்தை உருவாக்கி இருந்தார் வெங்கட் பிரபு. ஆனால் இந்த படம் ஏகப்பட்ட சர்ச்சைகளை இவருக்கு கொண்டு வந்து சேர்த்தது.

தற்போது, பார்ட்டி, என்சி 22 உள்ளிட்ட படங்களை இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் நேரடியாக தெலுங்கு உலகிற்கு செல்கிறார். அதோட தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகிறார் நாக சைதன்யா. தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் உருவாக உள்ளது இந்த படம் . nc22 என தற்காலிகமாக இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. பட குழு மற்றும் நடிகர்கள் தற்போது இறுதி செய்யப்பட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு...தனுஷும்.. சிம்புவும்...ஒரே படத்திலா? வெற்றிமாறனின் சூப்பர் பிளான்

அரவிந்த்சாமி, பிரியாமணி மற்றும் விஸ்வநாத், சம்பத்ராஜ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக முன்னதாக வெங்கட் பிரபு அறிவித்து இருந்தார். தற்போது பிரேம் ஜியும் இணைந்துள்ளார். இது குறித்த பதிவிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். பவன் குமார் வணங்குகிறார். இளையராஜாவும் அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்த இசையமைக்க உள்ளனர்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக்பாஸ் ஜூலியுடன் முதல் முறையாகக் கைகோர்த்த வருங்கால கணவர்: வைரல் கிளிக்ஸ்!
மருமகன் மீது கொலை முயற்சி புகார்: 'கார்த்திகை தீபம் சீரியல் கார்த்திக் அதிரடி கைது!