
‘ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும் என்று நம்புகிறாரோ என்னவோ இந்தத் தேர்தல் பிரச்சாரத்துக்கு விஜயகாந்த் எப்போது வருவார் என்று இன்னும் இரண்டு நாளில் தெரிந்துவிடும் என்கிறார் பிரேமலதா.
வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அடுத்த சோளிங்கரில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பில், சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வெங்குபட்டு சம்பத் மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் ஏ.கே.மூர்த்தி ஆகியோரை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில்; கடவுள் இல்லை என்ற கொள்கையை கொண்ட திமுகவினருக்கு வாக்கினை அளித்துவிட்டு, பின்னர் குறைகளை கடவுளிடம் முறையிட்டால் அவர் கேட்கமாட்டார். ஆகவே கடவுள் நம்பிக்கை கொண்ட எங்களுக்கு வாக்களியுங்கள்.
பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியாத திமுக, காங்கிரஸ் கட்சியனருக்கா உங்கள் ஓட்டு? எனவே மோடிக்கு மீண்டும் வாக்களிங்கள். அதிமுக கூட்டணியினர் தமிழகத்திற்கு தேவையான அனைத்தையும் பெற்று தருவார்கள். தேர்தல் வெற்றிக்கு பின் அனைத்து கூட்டணி கட்சியின் தலைவர்களும், பிரதமரிடம் வலியுறுத்தி நதிநீர் இணைப்பை நிறைவேற்றுவோம் என்று பேசினார்.
நிகழ்ச்சி முடிந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த பிரேமலதா,”விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வரமாட்டார் என்று எதிர்க்கட்சியினர் கூறுவதை நம்பவேண்டாம். அவர் என்று முதல் பிரச்சாரத்தில் கலந்துகொள்வார் என்பதை இன்னும் இரண்டு நாளில் அறிவிப்போம்’என்றார். எந்தத் தேர்தல், எந்த விஜயகாந்த், எந்த இரண்டு நாள் என்று நிருபர்களும் கேட்கவில்லை. பிரேமலதாவும் சொல்லவில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.