22 வருட பிரிவுக்குப் பின் மீண்டும் ‘கணவன் மனைவி’யான சரத்குமார், ராதிகா...மணிரத்னம் முடித்து வைத்த பஞ்சாயத்து...

Published : Apr 12, 2019, 03:58 PM IST
22 வருட பிரிவுக்குப் பின் மீண்டும் ‘கணவன் மனைவி’யான சரத்குமார், ராதிகா...மணிரத்னம் முடித்து வைத்த பஞ்சாயத்து...

சுருக்கம்

சரத்குமாருக்கும், ராதிகாவுக்கும்  தனித் தனியாக கதை சொன்ன இயக்குநர் ஒருவர், கதை பிடித்துப்போய் இருவரும் நடிக்க சம்மதித்தது வரை அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக நடிக்கவிருக்கும் சுவாரசியமான தகவலை மறைத்துள்ளார்.

சரத்குமாருக்கும், ராதிகாவுக்கும்  தனித் தனியாக கதை சொன்ன இயக்குநர் ஒருவர், கதை பிடித்துப்போய் இருவரும் நடிக்க சம்மதித்தது வரை அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக நடிக்கவிருக்கும் சுவாரசியமான தகவலை மறைத்துள்ளார்.

2013 ஆம் ஆண்டு வெளியான 'சென்னையில் ஒருநாள்’ படத்தில் ராதிகாவும் சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கணவன், மனைவியாக நடிக்கவில்லை. தற்போது விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் ’வானம் கொட்டட்டும்’ படத்தில் இருவரும் இணைந்து நடிப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகின. தற்போது இவர்கள் கணவன் மனைவியாக நடிப்பது உறுதியாகியுள்ளது.

மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் இந்தப் படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனசேகரன் இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக மடோனா செபாஸ்டின் நடிக்கிறார்.திரைக்கதையை மணிரத்னமும் தனசேகரும் இணைந்து எழுதியுள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்தப் படத்தில் ப்ரீத்தா ஒளிப்பதிவாளராக இணையவுள்ளார். ஜூன் மாதம் இதன் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

சரத்குமாருக்கும், ராதிகாவுக்கும் இயக்குநர் தனசேகரன் தனித் தனியாக கதை சொல்லியுள்ளார்.அவ்வாறு கதை சொல்லும்போது இருவரிடமுமே அவர்களது ஜோடி யார் என்பதை சொல்லாமல் சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார். கதை பிடித்துப்போய் ராதிகா, சரத்  இருவருமே   நடிக்க சம்மதித்த பிறகுதான் தாங்கள் ஜோடியாக, அதுவும் 22 ஆண்டுகளுக்குப் பின் ஜோடியாக நடிக்கவிருக்கும் தகவலே தெரிந்திருக்கிறது.

இதுவரை தனித்தனியாக நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் ராதிகாவும் சரத்குமாரும் இதுவரை ‘நம்ம அண்ணாச்சி’,’சூர்ய வம்சம்’ ஆகிய இரு படங்களில் மட்டுமே இணைந்து நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  கணவன், மனைவியாக இது அவர்களுக்கு மூன்றாவது படம். ‘சூர்ய வம்சம்’ படம் ரிலீஸாகி 22 வருடங்கள் ஆகின்றன.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!