சொந்தத் தாயை அவரது சொந்த வீட்டை விரட்டிய நடிகை ‘பிதாமகன்’ சங்கீதா...

Published : Apr 12, 2019, 03:23 PM IST
சொந்தத் தாயை அவரது சொந்த வீட்டை விரட்டிய நடிகை ‘பிதாமகன்’ சங்கீதா...

சுருக்கம்

‘வயதான என்னை வெளியேற்றிவிட்டு நான் வசித்து வரும் வீட்டை அபகரிக்க முயல்கிறார் என் மகள் ’ என தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார் ‘பிதாமகன்’படப்புகழ் நடிகை சங்கீதாவின் அம்மா. கோடம்பாக்க வட்டாரத்தில் இச்செய்தி பரபரப்பாகியுள்ளது.

‘வயதான என்னை வெளியேற்றிவிட்டு நான் வசித்து வரும் வீட்டை அபகரிக்க முயல்கிறார் என் மகள் ’ என தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார் ‘பிதாமகன்’படப்புகழ் நடிகை சங்கீதாவின் அம்மா. கோடம்பாக்க வட்டாரத்தில் இச்செய்தி பரபரப்பாகியுள்ளது.

சங்கீதாவின் அம்மா பானுமதியின் புகார் குறித்து கூறிய  போலீசார் ‘எம்.ஜி.ஆரை வைத்து பத்து படங்களுக்கும் மேல் தயாரித்த கே.ஆர்.பாலனின் மகள் தான் பானுமதி. இவர் சென்னை வளசரவாக்கத்தில் இப்போது குடியிருக்கின்ற வீடு தன் மாமனார் வீட்டு வழியில் வந்த சொத்து. அந்த வீட்டில் இப்போது பானுமதி தரை தளத்திலும் சங்கீதாவும் அவரது கணவரும்  மாடியிலும் குடியிருக்கிறார்கள்.

அந்த வீடு இப்போது சங்கீதா பெயரில் இருக்கிறது. அந்த வீட்டை தன் அண்ணன், தம்பி அபகரித்துவிடுவார்கள் என்று சங்கீதாவுக்கு சந்தேகம். அதற்கு தன் அம்மாவும் துணை போய்விடுவார் என்று பயப்படுகிறார். பானுமதிக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. சமீபத்தில் தான் அவரது ஒரு மகன் இறந்தார். இந்த சூழலில் வீட்டைவிட்டு வெளியேறச் சொன்னால் அவர் எங்கேபோவார்? அதனால்தான் மகளிர் ஆணையத்தில் புகார் தந்திருக்கிறார்’என்று தெரிவித்தனர்.

பானுமதி தரப்பில் புகார் குறித்து கேட்டதற்கு புகாரில் எல்லாவற்றையும் சொல்லிவிட்டோம். நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. அப்படி நல்லது நடக்கவில்லை என்றால் அந்த சமயத்தில் விரிவாக பேசலாம் என்றனர்.

’பிதாமகன்’, ’தனம்’, ’உயிர்’, ’காளை’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சங்கீதா. பாடகர் கிரிசை திருமணம் செய்து கொண்டுள்ளார்.புகார் குறித்து விளக்கம் அளிக்க நேரில் ஆஜராகுமாறு சங்கீதாவுக்கு ஆணையம் சம்மன் அனுப்பியது. இரு நாட்களுக்கு முன் கணவர் கிரிசுடன் ஆணையத்தில் ஆஜரானார்.ஆணையத்தில் ஆஜரானது குறித்து சங்கீதாவிடம் கேட்டதற்கு. ‘‘சினிமா தொடர்பான வி‌ஷயம் என்றால் பேசலாம். இது என் தனிப்பட்ட வி‌ஷயம். இதைப்பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை’ என்றார். லேட்டஸ்டாக  விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்துவருகிறார் சங்கீதா.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!