’நடிப்புதான் எனக்குப் புடிச்ச தொழிலு’...10 வருடங்களுக்குப் பிறகு தமிழில் ரீ எண்ட்ரி கொடுக்கும் நடிகை...

Published : Apr 12, 2019, 02:51 PM IST
’நடிப்புதான் எனக்குப் புடிச்ச தொழிலு’...10 வருடங்களுக்குப் பிறகு தமிழில் ரீ எண்ட்ரி கொடுக்கும் நடிகை...

சுருக்கம்

”குழந்தைகள் மிக வேகமாக வளர்ந்துவிட்டார்கள். எனவே மீண்டும் படங்களில் நடிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை என்பதால் தொடர்ச்சியாக கதை கேட்டு வருகிறேன்” என்கிறார் ‘நடிப்புதான் எனக்குப் பிடிச்ச தொழிலு’ என்று சொல்லாமல் சொல்லும் மாளவிகா.  

”குழந்தைகள் மிக வேகமாக வளர்ந்துவிட்டார்கள். எனவே மீண்டும் படங்களில் நடிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை என்பதால் தொடர்ச்சியாக கதை கேட்டு வருகிறேன்” என்கிறார் ‘நடிப்புதான் எனக்குப் பிடிச்ச தொழிலு’ என்று சொல்லாமல் சொல்லும் மாளவிகா.

99’ல் அஜித்துடன் 'உன்னைத்தேடி’ படத்தில்  அறிமுகமாகி சுமார் பத்து ஆண்டுகள் வரை பிசியாக இருந்தவர் மாளவிகா.’வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்...’,’கருப்புதான் எனக்குப்பிடிச்ச கலரு’ பாடல்களில் நடனம் ஆடி மிகவும் பிரபலமானார். ’ரோஜா வனம்’, ’வெற்றி கொடி கட்டு’, ’சந்திரமுகி’, ’திருட்டு பயலே’, ’குருவி’, ’வியாபாரி’, ’சபரி’ உள்பட பல முக்கிய படங்களில் நடித்துள்ளார்.

10 வருடங்களுக்கு முன்பு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகினார். மாளவிகாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் மும்பையில் வசித்து வந்தார். தற்போது குழந்தைகள் இருவரும் ஓரளவுக்கு வளர்ந்துவிட்ட நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க தயாராகி உள்ளார். 2 கதைகள் கேட்டுள்ளார். இவற்றில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

tஹனது ரீ எண்ட்ரி குறித்துப் பேட்டி அளித்த அவர் “தமிழில் நல்ல கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் நடித்தேன். முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தேன். ரசிகர்களும் என்மீது அன்பு காட்டினார்கள். ’வாளமீன்’ பாடல் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. திருமணத்துக்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினேன். குழந்தைகளை நல்லபடியாக வளர்த்தெடுக்கவேண்டிய பொறுப்பை சிறப்பாக முடித்துவிட்டேன். மீண்டும் படங்களில்  நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இப்போது அதற்கான நேரம் வந்துள்ளது. புதிய படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறேன். நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன்.”என்கிறார்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!