ஐ லவ் யூ செல்லம்... அதுக்காக உண்மையை இப்படியா போட்டு உடைப்பாங்க

Published : Feb 06, 2019, 02:51 PM ISTUpdated : Feb 06, 2019, 02:55 PM IST
ஐ லவ் யூ செல்லம்... அதுக்காக உண்மையை இப்படியா போட்டு உடைப்பாங்க

சுருக்கம்

பட வாய்ப்புகள் இல்லாததால் நான் அரசியலில் குதிக்கிறேன் என்கிறார்கள். அப்படியில்லை. இப்போதைக்கு வட வாய்ப்புகள் இல்லைதான். அடுத்த ஆறு மாசம் முழுவதும் என் கவனம் அரசியலில்தான் இருக்கும்.

* பணம் கொடுத்தவருக்கே ஓட்டு போடவேண்டும் என்று கட்டாயம் இல்லை. யாரும் தான் சொந்தமாக உழைத்து சம்பாதித்த பணத்தை தானமாக அளிக்கவில்லை. எவரால் வன்முறைகளும், மதவாதமும், ஊழல்களும் குறையலாம் என்று சிந்தித்துப் பார்த்து ஓட்டளிக்க வேண்டும்: இளவரசி மகள் கிருஷ்ணபிரியா. (இந்தப் புள்ளைக்குள்ளேயும் எம்பூட்டு புரட்சிகள் இருக்குதுன்னு பாரேன். அது சரிதாயீ, அம்மா ஆட்சியில இருந்தப்ப உன் பேச்சையே காணோமே ஒரு வேளை கோமாவுல இருந்தீகளா?)

* நாங்கள் ஆட்சிக்கு வந்து, தலைவர் ஸ்டாலின் முதல்வரானதும் மக்களின் எல்லா கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். வெற்றி விழாவில் நான் கலந்து கொள்வேன்: உதயநிதி. (வெற்றி விழா!...ன்னா எப்படி தம்பி? படம் மொக்கை, வசூல் காலின்னு தெரிஞ்சாலும் கூட, தயாரிப்பாளர் தலையில மறுபடியும் துண்டை போட்டு, கேக் வாங்கி, படம் ரிலீஸான ரெண்டாவது நாளே கொண்டாடுவீங்களே அது மாதிரியா?)

* நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க.விலிருந்து அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை!: அமைச்சர் சி.வி.சண்முகம். (அப்பா துணை முதல்வர் சொன்னதெல்லாம் உட்டாலக்கடியாண்ணே? முக்கிய கட்சிகள் கூட பேச்சுவார்த்தை நடக்குது, ரகசியம் பரம ரகசியம்!ன்னு பில்ட் அப் விட்டதெல்லாம் உள்ளார எப்போதும் உல்லாலா! உல்லாலாவாண்ணே!)

* பட வாய்ப்புகள் இல்லாததால் நான் அரசியலில் குதிக்கிறேன் என்கிறார்கள். அப்படியில்லை. இப்போதைக்கு வட வாய்ப்புகள் இல்லைதான். அடுத்த ஆறு மாசம் முழுவதும் என் கவனம் அரசியலில்தான் இருக்கும்!: பிரகாஷ் ராஜ். (யதார்த்த வாழ்க்கையில நீங்க  ஹீரோவோ, வில்லனோ, அரசியல்ல ஜெயிப்பீங்களோ இல்லையோ! ஆனா, இப்போதைக்கு பட வாய்ப்புகள் இல்லைன்னு பட்டுன்னு ஓப்பனா சொன்னீங்க பாருங்க. செல்லம்ம்ம் ஐ லவ் யூ !)

* உ.தனியரசு கூட ரெண்டுவாட்டி எம்.எல்.ஏ.வாகிட்டார். ஆனா தனக்கு அந்த கொடுப்பினை இல்லை, ஆக எப்படியாவது எம்.பி. ஆகிடணும்னு ஆசைப்படுறார் ஈஸ்வரன்: செய்தி. (ஏனுங்க தனியரசு ஃபுல்டை அரசியல் பார்த்தது போக, ஓவர் டைமும் அரசியல்தான் பார்க்கிறாரு. ஆனா நீங்களோ ‘நான் பார்ட் டைம் அரசியல்வாதின்’ன்னு பெருமையா பேட்டி கொடுத்த அளு. அப்புறம் எப்படி வெளங்கும்?)

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Thalaivar Thambi Thalaimaiyil: பாக்ஸ் ஆபீஸ்ல இனி தம்பியோட ஆட்டம் தான்! மிரள வைக்கும் 10 நாள் வசூல் நிலவரம்!
Pandian Stores 2 Promo: சக்திவேலின் திட்டம் பலித்தது! பாண்டியன் குடும்பத்தில் வெடித்த புது பஞ்சாயத்து! பாண்டியன் ஸ்டோர்ஸில் இனி வரும் வாரங்கள் ரணகளம்!