
சமீபகாலமாக சின்னத்திரை நடிகர் நடிகைகளின் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இடைவிடாமல் ஷூட்டிங்கில் கலந்து கொள்வது, அதனால் ஏற்படும் சோர்வு, வேலை சுமையால் யாரிடமும் தன்னுடைய மனநிலை பற்றி பகிர்ந்து கொள்ளாமல் மனதிற்குள்ளேயே இவர்கள் வைத்து கொள்வதால், மன உளைச்சல் அதிகரித்து நடிகர்- நடிகைகள் தற்கொலைக்கு தூண்டப்படுவதாக மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மனஉளைச்சலால் மட்டும் பல சின்னத்திரை பிரபலங்கள், மற்றும் நடிகர் நடிகைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அந்த வகையில் தற்போது காதலன் ஏமாற்றியதால், தெலுங்கு திரையுலகை சேர்ந்த சின்னத்திரை நடிகை ஜான்சி என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஜான்சி, சில வருடங்களாக சூர்யா என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் அவ்வபோது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சூர்யா, ஜான்சியிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். ஜான்சி பல முறை போனில் தொடர்பு கொண்டபோதும் காதலனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
காதலால் ஏமாற்றியதால், சோகமாக காணப்பட்டு வந்த இவர், மன உளைச்சல் அதிகரித்து வீட்டில் பெற்றோர் மற்றும் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து அங்கு விரைந்து வந்த போலீசார், இவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதோடு போன் மற்றும் டேப் என இவர் பயன்படுத்தும் பொருட்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜான்சியின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் கதறியது, அங்கு சூழ்ந்திருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பம் சின்னத்திரை பிரபலங்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.