நான் தமிழன் தான்.... என்னை கன்னடக்காரன் என கூற அவர்களுக்கு என்ன தகுதி இருக்கு...பிரகாஷ்ராஜ் அதிரடி...

 
Published : Mar 06, 2017, 05:49 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
நான் தமிழன் தான்.... என்னை கன்னடக்காரன் என கூற அவர்களுக்கு என்ன தகுதி இருக்கு...பிரகாஷ்ராஜ் அதிரடி...

சுருக்கம்

prakash raj hot talking about lproducer concil

தயாரிப்பாளர் சங்க தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 5 அணி போட்டியிடுவதால் கடும் போட்டி நிலவி வருகிறது. அதே போல் 5 அணியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விஷால் தலைமையிலான அணியினர் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை சென்னையில் நடத்தினர். இந்த சந்திப்பில் நடிகரும் தயாரிப்பாளருமான பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டு, விஷாலுக்கு ஆதரவாக  பேசினார்.

அப்போது தயாரிப்பாளர் சங்கத்தினர்  கடந்த  பத்து வருடங்களாக  சோம்பேறிகளாக இருந்துள்ளனர். ஒரு பிரச்சனை என்று சங்கத்திடம் சென்றால் ஒத்துழைக்க மாட்டார்கள். நான் தனி ஆளாகவே என்னுடைய பிரச்சனையை சந்தித்தேன்.

நான் மட்டுமல்ல, இங்குள்ள அனைவருமே தயாரிப்பாளர் சங்கத்தினரால் நொந்துபோய் தற்போது நேரடியாக களமிறங்கியுள்ளோம். 

நான் இருபது படங்கள் வரை தயாரித்துள்ளேன். ஒரு தயாரிப்பாளருக்கு என்னென்ன கஷ்டங்கள் வரும் என்றும், அதற்கு என்ன தீர்வு என்றும் எனக்கு தெரியும். இனிமேல் நாங்கள் யாரிடமும் புகார் கூற செல்ல போவதில்லை. நாங்களே களத்தில் இறங்கிவிட்டோம். 

நான் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளதால் என்னை கன்னடர் என்று கூறுகின்றனர். என்னை தமிழர் இல்லை என்று கூறுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி உள்ளது. நான் தமிழன்தான் , என் அளவுக்கு உங்களால் தமிழ் பேச முடியுமா? தமிழ் இலக்கியம் பேச முடியுமா? 

விஷால் கூறியதை போல ஒரு வருடத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்போம் என்று உறுதி கூறுகிறேன்' என்று பிரகாஷ்ராஜ் பேசியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!
வட்டி வசூல் வேட்டையில் ராதிகா – ஊரே தெறித்து ஓடுது: எஸ்கே தயாரிப்பில் வந்த தாய் கிழவி டீசர்!