
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரகாஷ் ராஜ். ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என பல்வேறு மொழிகளில் சிறந்த நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் ந ’சிறுத்தை’ சிவாவின் ‘அண்ணாத்த’, பிரஷாந்த் நீலின் ‘கேஜிஎஃப் 2’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’, கார்த்திக் நரேனின் ‘மாறன்’, மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ’திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரகாஷ் ராஜ் குறித்து வெளியாகியுள்ள தகவலால் அவரை அனைவரும் மெட்சி வருகின்றனர். சமீபத்தில் பிரகாஷ் ராஜை சந்தித்த இயக்குனர் நவீன்...தந்தையை இழந்த மாணவி மேற்படிப்பை தொடர முடியாமல் சிரமப்பட்டு வருவதாக கூறியுள்ளார். ஸ்ரீசந்தானா என்ற அந்த மாணவி அதிக மதிப்பெண் எடுத்தும் பணம் இல்லாததால் யுகேயில் உள்ள யூனிவர்ஸிட்டியில் சேர முடியாமல் இருந்துள்ளார்.
பின்னர் செய்தியின் உண்மைத்தன்மையை கேட்டு அறிந்து கொண்ட பிரகாஷ் ராஜ் மாணவியின் படிப்புக்கு உதவியுள்ளார். இப்போது அந்த மாணவி தனது மாஸ்டர் டிகிரியை யுகே பல்கலைக்கழகத்தில் வெற்றிகரமாக முடித்துள்ளார். அதோடு அங்கேயே நல்ல வேலை கிடைக்கவும் பிரகாஷ் ராஜ் ஏற்பாடு செய்துள்ளார்.
பிரகாஷ் ராஜின் உதவியால் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஏழை குடும்பத்தின் பொருளாதார நிலை தற்போது தலைகீழாக மாறியுள்ளது. இது குறித்து ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குனர் நவீன்; "வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு அரிதாக கிடைக்கும் வாய்ப்புகளைக்கூட ஏழ்மையின் காரணமாக எட்ட முடியாத அவர்களுக்கு பிரகாஷ்ராஜ் போன்ற மனிதர்கள் ஒரு கலங்கரை ஒளி. நன்றி சார்" என நவீன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.