
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை நமீதா மாரிமுத்து, நாடியா சங், சின்ன பாப்பா, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, அபிஷேக்,இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் இதுவரை எலிமினேட் ஆகி உள்ளனர்.
நாமினேஷனில் இருந்து போட்டியாளர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள, பஸ் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. பஸர் அடித்ததும் அனைவரும் பஸ்ஸில் ஏற் வேண்டும், பின்னர் போட்டியாளர்களுக்கு பல தடங்கல்கள் ஏற்படும் எனவும் பிக் பாஸ் அறிவிப்பிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் ஹார்ன் அடிக்கும் போது, போட்டியாளர்கள் இறங்க வேண்டுமென பிக் பாஸ் கூற, அப்போது ராஜுவுக்கும், தாமரைச்செல்விக்கும் வாக்கு வாதம் ஏற்படுகிறது.
ஒவ்வொருவராக பேருந்திலிருந்து இறங்க வேண்டும் என பிக் பாஸ் கூற ராஜு, சஞ்சய், அபிநய், அக்ஷ்ரா, உள்ளிட்டோர் இறங்கிவிட்ட்னர். இதில் பாதி போட்டி வரை பேருந்திலிருந்து வெளியேறிய நாற்றமிகுந்த நிறை பொறுத்துக்கொண்டு பிரியங்கா இருந்தார். பின்னர் வெளியேறியவர்களுக்கு பீட்ஸா அனுப்பப்பட்டது. அந்த பீட்ஸாவை பேருந்தில் இருப்பவர்கள் முன்னர் வைத்து சாப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து வெஜ் பீட்ஸா உள்ளதா என விசாரித்த பிரியங்கா சட்டென பேருந்திலிருந்து இறங்கி பீட்ஸாவை ருசித்து அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
பின்னர் தாமரை எளியேற இறுதியாக அமீர், நிரூப் இருந்தனர். இதில் அமீர் விட்டுக்கொடுக்க நிரூப் இந்த டாஸ்கில் வெற்றி பெற்றார். இதனால் இந்த வார எலிமினேஷனில் இருந்து நிரூப் காப்பாற்றப்படுவார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.