
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த இசை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் பிரபலமானவர் ப்ரஜின், மெல்ல மெல்ல தன்னுடைய திறமைகளை வளர்த்து கொண்டு, சின்னத்திரை சீரியல் நடிகராக மாறினார்.
2005 ஆண்டு ஒளிபரப்பான 'இது ஒரு காதல் கதை' சீரியலில் நாயகனாக நடித்தார். பின்னர், பெண், காதலிக்க நேரமில்லை, 'அஞ்சலி', உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தார். இதை தவிர ஜோடி நம்பர் ஒன், போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு கலக்கினார்.
சின்னத்திரையை தாண்டி, வெள்ளித்திரையில் தொடர்ந்து கவனம் செலுத்தினார். ஆனால் இவரால்... சின்னத்திரையில் வெற்றிபெற முடிந்த அளவிற்கு திரையுலகில் நிலைக்க முடியவில்லை. எனவே தற்போது மீண்டும் சின்னத்திரை நாயகனாகவே மாறியுள்ளார்.
இந்நிலையில் இவர், நடிகையும் தொகுப்பாளருமான சாண்ட்ரா என்பவரை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின், வேலை காரணமாக நீண்ட நாட்கள் குழந்தை பெற்று கொள்ளாமல் இருந்த இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு, இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது.
மித்ரா - ருத்ரா என பெயரிடப்பட்டுள்ள இவர்களின் தற்போதைய புகைப்படங்களை வெளியிட்டு இருவரும் வாலு பொண்ணுக என்றும், இவர்கள் தங்களுடைய முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ளதாகவும் கூறியுள்ளார் ப்ரஜின். இவர்களின் இந்த புகைப்படம் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.