கொரோனா நேரத்தில் நர்ஸ் பாக்குற வேலையா இது?...பிக்பாஸ் ஜூலியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்...காரணம் இதுதான் !

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Apr 01, 2020, 12:25 PM IST
கொரோனா நேரத்தில் நர்ஸ் பாக்குற வேலையா இது?...பிக்பாஸ் ஜூலியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்...காரணம் இதுதான் !

சுருக்கம்

சிலரோ இப்படி போட்டோ போடுற வேலையை விட்டு ஏதாவது ஹாஸ்பிட்டலில் போய் நர்ஸ் வேலை பார்த்தாலாவது கொரோனா நேரத்தில் உபயோகமாக இருக்கும் என்று அட்வைஸ் செய்து வருகின்றனர்.   

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது விதவிதமாக கோஷம் போட்டு மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. அதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். ஜூலி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது அதை ரசிகர்கள் பெருமையாக பார்த்தார்கள். 

இதையும் படிங்க: வாத்தி கம்மிங்... அப்பா ரோபோ சங்கருடன் சேர்ந்து செம்ம குத்தாட்டம் போட்ட இந்திரஜா...வைரலாகும் டிக்-டாக் வீடியோ!

ஆனால் இடையில் காயத்ரியுடன் சேர்ந்து கொண்டு ஜூலி செய்த சில காரியங்கள் அனைவரையும் கடுப்பாக்கியது. அதனால் பிக்பாஸ் வீட்டில் மட்டுமல்லாது, தமிழக ரசிகர்களிடம் ஜூலிக்கு கெட்ட பெயர் மட்டுமே மிஞ்சியது. அப்போது மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு மெயின் கன்டன்ட்டாக இருந்தவர் ஜூலி தான். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகும் ஜூலியை நெட்டிசன்கள் விடுவதாக இல்லை. அவர் என்ன செய்தாலும், அதை மீம்ஸ் கிரியேட் செய்து கலாய்த்து வருகின்றனர். 

தற்போது கொரோனா பீதி உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் தஞ்சமடைந்துள்ளனர். இந்த சமயத்தில் நர்ஸ் என்ற பொறுப்புணர்ச்சி கொஞ்சமும் இல்லாமல் பிக்பாஸ் ஜூலி, சோசியல் மீடியாவில் செய்து வரும் சேட்டைகள் நெட்டிசன்களை செம்ம கடுப்பாக்கியுள்ளது. 

இதையும் படிங்க: தோழிகளுடன் கூல் போஸ் கொடுத்த விஜய் மகள்... இணையத்தில் வைரலாகும் திவ்யா சாஷா லேட்டஸ்ட் போட்டோ...!

லாக்டவுனில் வீட்டில் இருப்பவர்களுக்கு போர் அடிக்க கூடாது என்பதற்காக நாள் தோறும் தனது புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார். அதைப் பார்த்து காண்டான நெட்டிசன்கள், நீ எல்லாம் திருந்தவே மாட்டியா ஜூலி, வீட்டில் சும்மா இருக்க சொன்னா ஏன் இப்படி எதையாவது பண்ணிட்டு இருக்க என்று சகட்டு மேனிக்கு திட்டி வருகின்றனர். 

இதையும் படிங்க: வல்லரசுகளாலும் முடியாது... நிச்சயம் இந்தியா தப்பிக்கும்... ஐ.நாவின் அதிரடி கணிப்பு....!

சிலரோ இப்படி போட்டோ போடுற வேலையை விட்டு ஏதாவது ஹாஸ்பிட்டலில் போய் நர்ஸ் வேலை பார்த்தாலாவது கொரோனா நேரத்தில் உபயோகமாக இருக்கும் என்று அட்வைஸ் செய்து வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!