
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "பிகில்" படத்தில் பாண்டியம்மாவாக நடித்தவர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா. முதல் படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். படப்பிடிப்பு தளத்தில் துறு,துறுவென சுற்றி வந்த இந்திரஜாவின் டிக்-டாக் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் செம்ம பிரபலம். அந்த படத்தில் விஜய் அவரை குண்டம்மா... குண்டம்மா... என அழைத்து வெறியேத்தும் சீன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அந்த ஒரே சீனில் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்துவிட்டார் பாண்டியம்மாள்.... இல்லை, இல்லை இந்திரஜா. பிகில் படத்தில் நடிப்பதற்கு முன்பே இருந்தே இந்திரஜா டிக்-டாக்கில் செம்ம பிரபலம். சாய்பல்லவியின் பிரேமம் டான்ஸை வைத்து இந்திரஜா செய்த டிக்-டாக் சோசியல் மீடியாவில் வைரலானது. அதேபோல் அப்பா, அம்மா, தங்கையுடன் சேர்ந்தும் விதவிதமான டிக்-டாக் வீடியோக்களை செய்து அசத்தியுள்ளார்.
இதையும் படிங்க: தோழிகளுடன் கூல் போஸ் கொடுத்த விஜய் மகள்... இணையத்தில் வைரலாகும் திவ்யா சாஷா லேட்டஸ்ட் போட்டோ...!
தற்போது "மாஸ்டர்" படத்தில் இருந்து வெளியாகி செம்ம வைரலாகி வரும் பாடல் “வாத்தி கம்மிங்”, இந்த பாட்டுக்கு அப்பா ரோபோ சங்கருடன் சேர்ந்து மாஸ் குத்தாட்டம் போட்டுள்ளார் இந்திரஜா. இந்த வீடியோவை தளபதி விஜய் பார்த்தால் கூட அசந்து விடுவார், அப்படி அப்பாவும், பொண்ணும் சேர்ந்து சூப்பராக நடனமாடியுள்ளார்.
இதையும் படிங்க: “15 வயசிலேயே வீட்டை விட்டு ஓடி வந்தேன்”... “அந்த நபரால் தான்”...பகீர் கிளம்பும் பிரபல நடிகையின் பிளாஷ் பேக்!
பிரபல நடிகரான ரோபோ சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்த டிக்-டாக் வீடியோ சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கடந்துவிட்டது. கொரோனா மாஸ்க் உடன் அப்பா, மகள் போட்டிருக்கும் இந்த மாஸ் ஆட்டம் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.