
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ், ராணா, ரம்யாகிருஷ்ணன் தமன்னா நடிப்பில் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்போடு, கடந்த மாதம் 28-ம் தேதி வெளியான படம் 'பாகுபலி 2'. இப்படம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
'பாகுபலி 2' படத்துக்கு இந்திய திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் பெரும் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது 'பாகுபலி 2'. இதுவரை இப்படம் 1300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
உலகமே கொண்டாடும் இந்தப் படத்தைப் பற்றி, பாலிவுட்டின் கான் நடிகர்கள் ஒருவர் கூட வாய் திறக்கவில்லை. தங்களால் முடியாததை, தென்னிந்திய நடிகன் ஒருவன் சாதித்துக் காட்டிவிட்டானே என்ற பொறாமையில் புழுங்கித் தவிக்கின்றனர்.
‘பாகுபலி 2’ வெற்றியால், நேரடி பாலிவுட் படங்களில் நடிக்கவும் பிரபாஸுக்கு அழைப்புகள் வந்துள்ளன. அதில் முக்கியமானது, பிரபல தயாரிப்பாளரான கரண் ஜோஹரின் அழைப்பு. ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களையும் ஹிந்தியில் வெளியிட்ட கரண் ஜோஹர், தனக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய லாபத்தால் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
எனவே, பிரபாஸை வைத்து 2 ஹிந்திப் படங்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளார் என்கிறார்கள். இதன்மூலம், பாலிவுட்டின் கான் நடிகர்களுடன் நேரடியாக மோதப் போகிறார் பிரபாஸ்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.