ராமர் அவதாரத்தில் பிரபாஸ்..! ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்!

Published : Mar 30, 2023, 07:17 PM ISTUpdated : Mar 30, 2023, 07:18 PM IST
ராமர் அவதாரத்தில் பிரபாஸ்..! ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்!

சுருக்கம்

இன்று கொண்டாடப்படும் ராம நவமியை முன்னிட்டு, பிரபாஸ் நடித்துள்ள 'ஆதிபுருஷ்' படத்தில் இருந்து, புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.  

ஸ்ரீ ராமரின் பிறந்த நாள் ராம நவமி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. நன்மையின் தொடக்கத்தை குறிப்பிடும் இந்நன்னாளில் ராமாயண காவியத்தை தழுவி தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' எனும் திரைப்படத்தின் தெய்வீகம் ததும்பும் புதிய போஸ்டரை அப்பட குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

படக்குழு வெளியிட்டிருக்கும் போஸ்டரில் ஸ்ரீ ராமராக பிரபாஸ், சீதா தேவியாக கிருத்தி சனோன், லக்ஷ்மணனாக சன்னி சிங், அனுமனாக தேவதத்தா நாகே ஆகியோர் தோன்றியிருக்கிறார்கள். தர்மம், தைரியம், தியாகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஸ்ரீ ராமரின் நல்லொழுக்கத்தையும் மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது. இதனை இந்த போஸ்டர் நேர்த்தியான முறையில் பிரதிபலித்திருக்கிறது.

நரிக்குறவ சமுதாயத்தினரை திரையரங்கம் உள்ளே அனுமதிக்காத ரோகினி தியேட்டர் ஊழியர் மீது வழக்கு பதிவு!

அதர்மத்தை வீழ்த்தி தர்மம் வெல்வதை அடையாளமாக குறிக்கும் இந்த ராமநவமி தினத்தன்று படக் குழுவினர் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு, அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறார்கள். 

படு ஸ்லிம்... பரவசமூட்டும் கவர்ச்சி உடையில் இரக்கமே இல்லாமல்! இடையை வளைத்து வளைத்து காட்டி இம்சிக்கும் காஜல்!

இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'ஆதி புருஷ்'. இதில் பிரபாஸ், கிருத்தி சனோன், சையீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டி சீரிஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் பூஷன் குமார், க்ரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார் மற்றும் ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் ஜூன் மாதம் 16ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படம் ஐமேக்ஸ் மற்றும் 3டி தொழில்நுட்பத்திலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்