பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பாகுபலி நாயகன்!

Published : Oct 23, 2018, 05:03 PM ISTUpdated : Oct 23, 2018, 05:04 PM IST
பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பாகுபலி நாயகன்!

சுருக்கம்

ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளில் தனது படம் குறித்த ப்ரத்யேக செய்தி அல்லது காட்சிகளை ரசிகர்களுக்கு விருந்தாக அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகர் பிரபாஸ் இந்த ஆண்டு தனது பிறந்த நாளான அக்டோபர் 23ம் தேதி, தற்போது தயாரிப்பிலிருக்கும் தனது பிரம்மாண்ட படமான 'சாஹூ' திரைபடத்தின் "Shades of Saaho" எனும் ப்ரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்டார்.

ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளில் தனது படம் குறித்த ப்ரத்யேக செய்தி அல்லது காட்சிகளை ரசிகர்களுக்கு விருந்தாக அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகர் பிரபாஸ் இந்த ஆண்டு தனது பிறந்த நாளான அக்டோபர் 23ம் தேதி, தற்போது தயாரிப்பிலிருக்கும் தனது பிரம்மாண்ட படமான 'சாஹூ' திரைபடத்தின் "Shades of Saaho" எனும் ப்ரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்டார்.

இந்த முன்னோட்ட காட்சிகளில் பிரபாஸின் ஸ்டைலிஷ் லுக் மற்றும் அபு தாபியில் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட சண்டைக்காட்சிகளின் தொகுப்பு இடம்பெற்றுள்ளது. இது வெளியான அந்த நொடியிலிருந்து உலகெங்கிலும் இருக்கும் பிரபாஸ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு அல்லாமல் இப்படத்திற்க்கான எதிர்ப்பார்ப்பையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

1500 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்த பாகுபலி 2 படத்திற்கு பிறகு  தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் "சாஹூ"  மிகுந்த பொருட்செலவில் வளர்ந்து வருகிறது. 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில், இப்படத்தின் அடுத்த காட்சி தொகுப்புகள் எப்போது வெளியிடப்படும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாய் அமைத்துள்ளது "Shades of Saaho" காட்சி தொகுப்பு. ஒரு குறுகிய காட்டிசிகளின் தொகுப்பாக அளிக்க ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ள படக்குழு, பெரிய பட்ஜெட் படமான "சாஹூ" படத்தின் தயாரிப்பும் திரைப்பட காட்சியையும் கலவையாக கொடுத்து படத்தின் முன்னோட்டத்தை ரசிகர்களுக்கு விருந்தாக அளித்துள்ளனர். 

இப்படத்தில் பிரபாஸின் நாயகியாக ஷ்ரதா கபூர் நடிக்க ஜாக்கி ஷிராஃப், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, சுங்கி பாண்டே, மகேஷ் மஞ்சிரெக்கர், முரளி ஷர்மா உள்ளிட்ட பல அனுபவமிக்க நடிகர்கள் நடித்துள்ளனர்.

இயக்குனர் சுஜீத் இப்படத்தை இயக்க, வம்சி, பிரமோத், விக்ரம் அவர்களின் UV கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அமிதாப் பட்டாச்சார்யாவின் ரசிக்கதக்க பாடல் வரிகளுக்கு, சங்கர்-எஹ்சான்-லாய் இணை இசையில் குழைத்து உங்கள் காதுகளில் ரீங்காரமிட பாடல் பட்டியல் தயாராகிவிட்டது. மதியின் ஒளிப்பதிவும், சாபுசிரிலின் தயாரிப்பு வடிவமைப்பும் எதிர்பார்ப்புகளை மேலும் அதிகபடுத்தியுள்ளது. திரைப்படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள பிரதியாக காட்சி இதோ... 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

5 மினிட்ஸ் பிக்பாஸ் என்று கேட்ட மகள்கள்: சந்தோஷத்தில் திகைத்து நின்ற சாண்ட்ரா! அழ வைக்கிறீங்களேப்பா!
ஹாலிவுட் லெஜண்ட் கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த தரமான சம்பவம்... 'தி ஒடிஸி' டிரெய்லர் இதோ