
நடிகர் அர்ஜூன் மீது மேலும் 4 நடிகைகள் பாலியல் புகார் தெரிவித்துள்ளதாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் புதிய குண்டை போட்டுள்ளார். நிபுணன் படப்பிடிப்பின் போது நடிகர் அர்ஜூன் தன்னை தவறான நோக்கத்தில் தொட்டதாக ஸ்ருதி கூறியிருந்தார். மேலும் படப்பிடிப்பின் போது நெருக்கமான காட்சிகளை பயன்படுத்திக் கொண்டு அர்ஜூன் தன்னிடம் வரம்பு மீறியதாகவும் ஸ்ருதி தெரிவித்திருந்தார். அர்ஜூனுக்கு தான் உடன்படாத காரணத்தினால் படப்பிடிப்பு தளத்தில் எண்ணற்ற பிரச்சனைகளை சந்தித்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
ஸ்ருதியின் குற்றச்சாட்டிற்கு நடிகர் அர்ஜூன் உடனடியாக மறுப்பு தெரிவித்தார். ஸ்ருதி மீது வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் அறிவித்தார். இதனை தொடர்ந்து நடிகை ஸ்ருதி உடடினயாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அர்ஜூனுக்கு எதிரான தான் கூறிய பாலியல் புகாருக்கு திரையுலகில் உள்ள பல்வேறு பெண்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறினார்.
தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரபல நடிகை ஒருவர் அர்ஜூன் தன்னிடமும் வரம்பு மீறியதாக கூறியது அதிர்ச்சியாக இருந்தது என்று ஸ்ருதி தெரிவித்தார். இதே போல் மேலும் மூன்று பிரபல நடிகைகளும் தன்னை தொடர்பு கொண்டு அர்ஜூன் தங்களை எப்படி எல்லாம் நடத்தினார் என்று கண்ணீர் மல்க கூறியதாகவும் ஸ்ருதி கூறினார். அந்த நடிகைகள் தங்கள் பெயர்களை தற்போதைக்கு வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் ஸ்ருதி குறிப்பிட்டார்.
ஆனால் அந்த நடிகைகளின் சம்மதம் பெற்று விரைவில் அந்த நான்கு பேரையுமே தங்களுக்கு அர்ஜூனிடம் ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து வெளிப்படையாக பேச வைக்க முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும் ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்துள்ளார். ஒரு நடிகை பாலியல் புகார் கூறியதற்கே அர்ஜூன் நிலைகுலைந்து போய் உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் 4 நடிகைகள் புகார் கூறினால் என்ன ஆகும் என்பது தான் தமிழ் மற்றும் கன்னட திரையுலகில் தற்போதைய பேச்சாக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.