
ஆழமான பாடல் வரிகளால் ரசிகர்கள் மனதில் அசைக்க முடியாத இடத்தை பிடித்தவர் கவிஞர் வைரமுத்து. தமிழ் சினிமாவில் பல்வேறு விருதுகளை வாரி குவித்து, மிக உயரிய இடத்தை எட்டிய இவர் குறித்து பாடகி சின்மயி வெளியிட்ட தகவல் ஒட்டு மொத்த திரையுலகை சேர்ந்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் சில இளம் பாடகிகள் தன்னிடம் வைரமுத்து குறித்து புகார் கூறியதாக கூறி... அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் ஏ.ஆர்.ரகுமான் சகோதரியும், இசையமைப்பாளருமான ரெஹானா.
தமிழ் திரையுலகத்தில் சிறந்த கவிஞராக பார்க்கப்படும் இவர் மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியதை தொடர்ந்து, பெண்களும் சிலரும் தாமாகவே முன்வந்து வைரமுத்து தங்களிடம்மும் தவறாக நடந்து கொண்டார் என தொடர்ந்து புகார் கூறினர்.
மேலும் இதற்கு பதியளித்த, வைரமுத்து... தன் மீது பொய்யான புகார் கூறப்பட்டுள்ளதாகவும், என் மீது தவறிருந்தால் வழக்கு தொடுக்கலாம். சட்ட ரீதியாக பிரச்னையை சந்திக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையி, சமீபத்தில் ரெஹானா ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் “ வைரமுத்து மிகவும் பெரிய மனிதர். அவரை பற்றி எப்படி பேசுவது என்று தெரியவில்லை? ஆனால், அவரை பற்றி சில பாடகிகள் என்னிடமும் புகார் கூறியுள்ளனர். அது எனக்கே தெரியும் என வெளிப்படையாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
எனவே, உண்மை எது என தெரியவில்லை. அதேநேரம், பெண்கள் மீதான பாலியல் தொல்லை அனைத்து இடங்களிலும் இருக்கிறது. வைரமுத்துவை மட்டும் டார்கெட் செய்யக்கூடாது” என அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.