Valimai Movie : அஜித்தின் ‘வலிமை’ படத்துக்கு வந்த திடீர் சிக்கல்.... எல்லாத்துக்கும் காரணம் பவர் ஸ்டார் தான்!

Ganesh A   | Asianet News
Published : Feb 16, 2022, 05:35 AM ISTUpdated : Feb 16, 2022, 05:37 AM IST
Valimai Movie : அஜித்தின் ‘வலிமை’ படத்துக்கு வந்த திடீர் சிக்கல்.... எல்லாத்துக்கும் காரணம் பவர் ஸ்டார் தான்!

சுருக்கம்

அஜித் நடித்துள்ள வலிமை (Valimai) திரைப்படத்தை வருகிற பிப்ரவரி 24-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய உள்ளனர்.

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் (Ajith) நடிக்கும் 2-வது படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் (Boney Kapoor) தயாரித்துள்ளார். குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக வலிமை தயாராகி உள்ளது. இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். 

மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா (Karthikeya) நடித்துள்ளார். யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. 

அதன்படி வருகிற பிப்ரவரி 24-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ரிலீஸ் நெருங்கி வருவதால் இதற்கான பணிகளும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன.

வலிமை திரைப்படம் தமிழ், தெலுங்கில் சோலோவாக ரிலீசாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இப்படத்துக்கு போட்டியாக பவர்ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி உள்ள பீம்லா நாயக் (Bheemla Nayak) திரைப்படம் வருகிற பிப்ரவரி 25-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் தெலுங்கில் அஜித்தில் வலிமை படத்தின் வசூல் பாதிக்கக்கூடும் சூழல் உருவாகி உள்ளது.

அஜித் நடிப்பில் வெளியாகும் முதல் பான் இந்தியா படம் வலிமை (Valimai). இந்தியில் இப்படத்துக்கு போட்டியாக ஆலியா பட்டின் கங்குபாய் கத்தியாவாடி படம் ரிலீசாகும் நிலையில், தற்போது தெலுங்கில் பீம்லா நாயக் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அய்யப்பனும் கோஷியும் என்கிற மலையாள படத்தின் ரீமேக் தான் பீம்லா நாயக் என்பது  குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?