AK61 ..அஜித் லுக் ...அதிகாரப்பூர்வ அறிவிப்பு..முன்பே கணித்த ஏசியாநெட் செய்தித்தளம்..

Kanmani P   | Asianet News
Published : Feb 15, 2022, 07:50 PM ISTUpdated : Feb 15, 2022, 08:14 PM IST
AK61 ..அஜித் லுக் ...அதிகாரப்பூர்வ அறிவிப்பு..முன்பே கணித்த ஏசியாநெட் செய்தித்தளம்..

சுருக்கம்

அஜித் குமாரின் 61 வது படத்திற்கான அஜித்தின்  முன்தயாரிப்பு  லுக்கை தயாரிப்பாளர் போனி கபூர் ஷேர் செய்துள்ளார் ..நீண்ட தாடியும் சால்ட் அண்ட் பேப்பர் ஸ்டாலுமாய் மாஸ் லுக்காக உள்ளதென ரசிகர்கள்  வைரலாக்கி வருகின்றனர்..

இயக்குனர்கள் பார்த்திபன், விஜய் மில்டன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர் எச்.வினோத். இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு நட்டி நட்ராஜ் நடிப்பில் வெளியான சதுரங்க வேட்டை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். வித்தியாசமான கதையம்சத்தோடு உருவாகி இருந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முதல் படத்திலேயே முத்திரை பதித்த எச்.வினோத், அடுத்ததாக கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை இயக்கினார். 

இப்படமும் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றுத்தந்தது. நேர்கொண்ட பார்வை ஒரு ரீமேக் படமாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கொடுத்து வெற்றி வாகை சூடினார் வினோத். இப்படத்தில் வினோத்தின் திறமையை பார்த்து வியந்துபோன அஜித், தனது அடுத்த படமான ‘வலிமை’ படத்தை இயக்கும் வாய்ப்பையும் கொடுத்தார்.

அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி இருக்கும் வலிமை திரைப்படம், பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக இருந்தது. கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக கடைசி நேரத்தில் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. 

இதனிடையே, அஜித்தின் 61-வது படத்தையும் எச்.வினோத் தான் இயக்க உள்ளதாகவும், போனி கபூர் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கான கதாபாத்திர தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. சமீபத்திய தகவல் படி, மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் மோகன்லால், ‘ஏ.கே.61’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

சமீபத்தில் நடிகர் மோகன்லால், தயாரிப்பாளர் போனிகபூரை மும்பையில் சந்தித்தார். அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வைரலானது.  இந்நிலையில் அஜித்தின் 61 வது படத்தில போலீஸ் கமிஷ்னராக நடிக்க மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா ஆகியோரிடம் படக்குழு பேசியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது..

இவர்களில் யார் நடிப்பார்கள் என்பது விரைவில் தெரியவரும்.. அதோடு இப்படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடிக்கவுள்ளதாகவும், ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த தபு.. பள்ள வருடங்களுக்கு பிறகு ‘ஏகே 61’ படத்தில் அஜித்துடன் மீண்டும் இணைவார் என்று ஒரு அப்டேட் வந்தது.

இந்நிலையில், தல 61 படத்துக்காக தயாராகி வரும் நடிகர் அஜித்தின் (Ajith) லேட்டஸ்ட் போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. தாடியை நீளமாக வளர்த்து கோர்ட் சூட் மற்றும் கண்ணாடி போட்டு செம்ம ஸ்டைலிஷாக இருக்கும் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ஒருவேள இதுதான் அஜித்தின் வில்லன் லுக்கா இருக்குமோ என சந்தேகித்து வந்தனர்... 

தொடர்புடைய செய்திகளுக்கு...AK 61 look : ‘தல 61’ படத்துக்காக ஸ்டைலிஷ் லுக்கிற்கு மாறிய அஜித்! லேட்டஸ்ட் போட்டோ பார்த்து மெர்சலான ரசிகர்கள்

ரசிகர்களின் யூகங்களுக்கு தீனிபோடும் விதமாக தற்போது வலிமை தயாரிப்பாளர் போனி கபூர் முன்தயாரிப்பு லுக்கை ஷேர் செய்துள்ளார்..அதில் நீண்ட தாடியும் சால்ட் அண்ட் பேப்பர் ஸ்டாலுமாய் மாஸ் லுக்காக உள்ளதென ரசிகர்கள்  வைரலாக்கி வருகின்றனர்..  இதன் மூலம் இந்த முறை பில்லா ரேஞ்சுக்கு ட்ரீட் இருக்குமென அஜித் பேன்ஸ் குதுகளத்தில் உள்ளனர்..

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஓவர் பில்டப்போடு வந்து புஸ்ஸுனு முடிந்த புதுச்சேரி மாநாடு..! விஜய் பேசியது என்ன? தளபதியின் முழு ஸ்பீச் இதோ
தென்னிந்தியாவில் வசூல் ராஜா யார்? 2025ல் பாக்ஸ் ஆபிஸை அதிரவிட்ட டாப் 10 மூவீஸ் ஒரு பார்வை