மீண்டும் பண மோசடி புகாரில் சிக்கிய பவர் ஸ்டார் சீனிவாசன்!

 
Published : Oct 17, 2017, 05:08 PM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
மீண்டும் பண மோசடி புகாரில் சிக்கிய பவர் ஸ்டார் சீனிவாசன்!

சுருக்கம்

power star cheating in money

'லத்திகா' என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகம் ஆன டாக்டர் பவர் ஸ்டார் சீனிவாசன். இந்தப் படத்தைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் காமெடி வேடத்தில் நடித்து பிரபலமானார்.

இந்நிலையில் இவர் மீது ஏற்கனவே, பல முறை பண மோசடி புகார்கள் காவல்  நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற மோசடிப் புகாரில் சிக்கி சமீபத்தில் கூட இரண்டு முறை காவல் நிலையம் சென்று, ஜாமீனில் வெளிவந்தார்.

அதன் பின்னும் தற்போது இவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மீண்டும் இவர் மீது சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தயாநிதி என்பவர் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரில், தற்போது பல படங்களில் காமெடியனாக நடித்து வரும் பவர் ஸ்டார் சீனிவாசன் தனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 4 1/2 லட்சம்வாங்கியிருக்கிறார்.

ஆனால் இதுவரை எந்த வாய்ப்பும் அவர் பெற்றுத்தரவில்லை. நேரில் சென்றாலும் அவரைப் பார்க்க முடியவில்லை. என் பணத்தையும் தராமல் இழுத்தடிக்கிறார். எனக்கு உரிய பணத்தை அவரிடம் இருந்து பெற்றுத்  தர வேண்டும் என்று தயாநிதி அந்தப் புகார் மனுவில் கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025-ல் 1000 கோடி வசூலை வாரிசுருட்டிய முதல் படம் எது?... இந்த ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்?
பராசக்தி படத்தில் சூர்யா நடிக்க மறுத்தது ஏன்? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த சுதா கொங்கரா