நடிகர் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்த, 'போர் தொழில்' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
'ராட்சசன்' பட பாணியில், வித்தியாசமான சைக்கோ திரில்லர் கதைகளத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் 'போர் தொழில்'. இந்த படத்தில் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் ஆகிய இருவருமே கதையின் நாயகர்களாக நடித்திருந்தனர். நிகிலா விமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா என்பவர் இயக்கியிருந்தார். படம் முழுக்க பரபரப்பு மற்றும் விறுவிறுப்பான காட்சிகளுடன் வெளியாகி, இரண்டு வாரங்களை கடந்தும் பல தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடியது.
இயக்குனர் விக்ரம் ராஜா இயக்கி இருந்த 'போர் தொழில்' திரைப்படம், அஜித்தின் 'துணிவு' பட வசூலை முறியடித்ததாகவும் தகவல்கள் வெளியானது. அதாவது தல அஜித் நடிப்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான, துணிவு திரைப்படம், கேரளாவில் ரூ.5 கோடி வசூலை பெற்ற நிலையில், 'போர் தொழில்' திரைப்படம், கேரள மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ரூ.5.1 கோடி வசூல், செய்து சாதனை செய்ததாக வெளியான தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மாஸ்டர் பிளான் போட்ட விக்கி! கோடிகோடியாய் கொட்டி கேரளாவில் புதிய தொழில் தொடங்கும் நயன்!
மேலும் ரூ.5.5 கோடி, பட்ஜெட்டில் உருவான இப்படம்... தற்போது வரை ரூ.20 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் ஜூலை 7-ஆம் தேதி, சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனால் இந்த தகவலை தற்போது வரை பட குழு தரப்பில் இருந்த உறுதி செய்யவில்லை.
அடேங்கப்பா 'புராஜெக்ட் கே' படத்தில் நடிக்க ஹீரோ பிரபாஸை விட வில்லன் கமலுக்கு இத்தனை கோடி சம்பளமா?
அசோக் செல்வன் சமீப காலமாக, தொடர்ந்து தரமான கதை களம் கொண்ட படங்களை தான் அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், இவர் நடிப்பில் வெளியான 'ஓ மை கடவுளே' திரைப்படத்தின், வெற்றிக்கு பின்னர், 'போர் தொழில்' திரைப்படம் தாறுமாறான வெற்றி பெற்றுள்ளதோடு, இப்படத்தின் மூலம் நடிகர் சரத் குமாருக்கு நிகரான தரமான நடிப்பை அசோக் செல்வன் வெளிப்படுத்தியது பார்க்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.