’தன்னை வச்சுப் படம் எடுத்தவங்க உயிரோட இருக்காங்களா, செத்தாங்களான்னு கூட அஜீத்,விஜய் சேதுபதி கவலைப்படுறதில்ல’...பொழந்து கட்டும் விநியோகஸ்தர்...

By Muthurama LingamFirst Published Aug 3, 2019, 5:47 PM IST
Highlights

’படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் படத்துக்குப் படம் ஹீரோக்கள் சம்பளத்தை ஏற்றிக்கொண்டே இருக்கிறார்கள். நம்மை வைத்துப் படம் தயாரித்த தயாரிப்பாளர்கள் உயிரோடுதான் இருக்கிறார்களா என்பதைப் பற்றி கூட அவர்கள் கவலைப்படுவதில்லை’என்று கொதியாய்க் கொதிக்கிறார் பிரபல விநியோகஸ்தரும் தியேட்டர் அதிபருமான திருப்பூர் சுப்பிரமணியம்.

’படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் படத்துக்குப் படம் ஹீரோக்கள் சம்பளத்தை ஏற்றிக்கொண்டே இருக்கிறார்கள். நம்மை வைத்துப் படம் தயாரித்த தயாரிப்பாளர்கள் உயிரோடுதான் இருக்கிறார்களா என்பதைப் பற்றி கூட அவர்கள் கவலைப்படுவதில்லை’என்று கொதியாய்க் கொதிக்கிறார் பிரபல விநியோகஸ்தரும் தியேட்டர் அதிபருமான திருப்பூர் சுப்பிரமணியம்.

தயாரிப்பாளர்கள் என்ற ஒரு இனமே மெல்ல அழிந்து வருவதற்குக் காரணமே முன்னணி ஹீரோக்கள்தான் என்று குற்றம் சாட்டிய அவர் மேலும் கூறுகையில்,”ஹீரோவுக்கு மார்க்கட் இருக்கு.கொடுக்கிறாங்க.வாங்கிக்கிறீங்க. அதை நான் குறை சொல்லல. ஆனா இவ்வளவு சம்பளம் வாங்குறீயே நீ என்னைக்காவது என்னை வச்சிப் படம் எடுத்தியே நல்லா இருக்கியான்னு கேட்டதுண்டா? உங்கிட்ட படம் வாங்கியவர்களுக்கு, தியேட்டர்களுக்கு ஏதாவது கிடைச்சுதான்னு விசாரிச்சுருக்கியா? எதுவுமே நீ விசாரிக்கிறது இல்லே. இந்தப்படத்துக்கு 50 கோடி வாங்கினால் அடுத்த படத்துக்கு 60 கோடி யார் தர்றாங்கன்னு கேட்டுட்டு ஓடுறே. அம்பது கோடி கொடுத்தானே அவன் இருக்கானா செத்துட்டானான்னு கூட பாக்க மாட்டேங்குற.

‘விவேகம்’னு ஒரு படம் எடுக்குறாங்க. அந்தப்படம் லாஸ்.அடுத்தும் அஜீத் அதே கம்பெனிக்கு கால்ஷீட் கொடுக்கிறார்.அவர் என்ன பண்ணனும்?அதுக்கு 40 கோடி வாங்கியிருந்தால் இதுக்கு 30 வாங்கியிருக்கணும்.ஆனால் அவர் 48 வாங்குறார். அப்புறம் நீங்க தயாரிப்பாளரை நீங்க நினைச்சுட்டு இருக்கீங்க.பணம் காய்க்கும் ஏ.டி.எம்.மிஷின்னா?தயாரிப்பாளர் நல்லா இருக்கணும்ங்குற எண்ணம் உனக்கு இல்லவே இல்ல.முடிஞ்சவரைக்கும் அந்த ஏ.டி.எம் கார்டைத் தேய்ச்சி எடுத்துறணும்னு நினைக்கிற.

இந்த மாதிரி இருந்தா தமிழ் சினிமா எப்பிடி உருப்படும்?மெல்ல தமிழ் சினிமா இனி சாகும். கொஞ்ச நாள்ல தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் இருக்கவே மாட்டாங்க. நடிகர்கள் நீங்களே படம் எடுத்துக்க வேண்டியதுதான். சமீபத்துல விஜய் சேதுபதி சொன்னாராம்,,என்னை வச்சுப் படம் எடுக்குற அத்தனை தயாரிப்பாளர்களும் கடைசியில துண்டு போடுறாங்க. அதனால இனிமே நானே சொந்தப்படம் எடுக்கப்போறேன்னு. எடுத்துக்கோ...எப்பிடித் துண்டு விழுந்ததுன்னு கூட கூப்பிட்டுக் கேட்க மாட்டேங்குறே. உங்கள  வச்சிப் படம் ஆரம்பிக்கிறப்ப 30 கோடியா இருக்குற பட்ஜெட் படம் முடியும்போது 50 கோடி ஆகிடுது. அப்படிருக்கப்ப ஒரு தயாரிப்பாளர் துண்டு போடாம வேற என்னதான் செய்யமுடியும்?”என்று சீருகிறார் திருப்பூர் சுப்ரமணியம்.

click me!