உலகப்புகழ் பெற்ற பாடகர் 'பாப் மார்லியின்' மகன் 'கி மணி மார்லி' முன்னிலையில் முருகன் மந்திரம் எழுதிய “தீரா தீராளே” பாடல்!

 
Published : Feb 15, 2018, 07:34 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
உலகப்புகழ் பெற்ற பாடகர் 'பாப் மார்லியின்' மகன் 'கி மணி மார்லி' முன்னிலையில் முருகன் மந்திரம் எழுதிய “தீரா தீராளே” பாடல்!

சுருக்கம்

pop morly son kee mani marlie sing murugan mathiram song

கேரளா, கொச்சி நகரில் நடைபெற்ற “மோஜோ ரைஸிங்” (MOJO RISING)  பிரமாண்ட இசை நிகழ்ச்சியில் உலகப்புகழ் பெற்ற பாடகர் பாப் மார்லியின் மகன் கி-மணி மார்லி முன்னிலையில் முருகன் மந்திரம் எழுதிய “தீரா தீராளே” பாடலை முதல் முறையாக பாடினார், பாடலின் இசை அமைப்பாளரும் பாடகியுமான அஞ்சு பிரம்மாஸ்மி.

16 பேண்ட்ஸ், இரண்டு நாட்கள்… என பிரமாண்டமாக நடந்த இந்த இசை நிகழ்ச்சியில் பெண்களின் குரலாக தன்னம்பிக்கை பேசும் பாடலாக "தீரா தீராளே" பாடலைப்பாடி பலத்த கைத்தட்டல்களையும் வரவேற்பையும் பெற்றார் அஞ்சு பிரம்மாஸ்மி. 

சர்வதேச போர்ச்சுகீசிய இசை விருதுக்காக தேர்வான இந்தியப்பாடகி அஞ்சு பிரம்மாஸ்மி தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம், க்ரீக், ஸ்பானிஷ், ரஷ்யன் உள்ளிட்ட 10 மொழிகளில் பாடிக்கொண்டிருப்பவர். அஞ்சு பிரமாஸ்மி இசையமைத்து பாடும் “இன்விக்டஸ்”(InvictuZ) ஆல்பத்திற்காக அவருடன் இணைந்துள்ளார், முருகன் மந்திரம். “இன்விக்டஸ்” ஆல்பத்தில் இடம் பெறும் பாடல்களில் ஒன்று “தீரா தீராளே”. 

இதுபற்றி முருகன் மந்திரம் கூறுகையில், "இந்த ஆல்பம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான ஆல்பம். அதிலும் அஞ்சு பிரம்மாஸ்மியுடன் பணியாற்றுவது அலாதி இன்பம். சர்வதேச இசையுடன் தொடர்பும் அனுபவமும் உள்ள அஞ்சு மிக அன்பான தோழியும் கூட. “தீரா தீராளே” பாடல், புரட்சிப்பாடகன் பாப் மார்லியின் மகன் கி-மணி மார்லி முன்னிலையில் முதல்முறையாக பாடப்பட்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி". என்றார்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தாராவை பகடைக்காயாக பயன்படுத்தி எஸ்கேப் ஆக பார்க்கும் கதிர்... தட்டிதூக்கினாரா கொற்றவை? எதிர்நீச்சல் தொடர்கிறது
கடத்தப்படும் கிரிஷ்... விஜயா மீது முத்துவுக்கு வந்த டவுட்; கடத்தியது யார்? - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்