
சினிமா தயாரிப்பாளர் அசோக் குமார் கடன் தொல்லையால் தற்கொலை செய்த சம்பவம் பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . இந்த சம்பவத்திற்கு பைனான்சியர் அன்பு செழியன் வட்டிக்கு மேல் வட்டி கேட்டு மிரட்டியது தான் காரணம் என அசோக் குமார் எழுதி வைத்திருந்த கடிதத்தில் குறிப்பிடிருந்தார்.
இந்நிலையில் திரையுலகை சேர்ந்தவர்கள் ஒரு சிலர், அன்பு செழியனுக்கு ஆதரவாகவும்... மற்றொரு தரப்பினர் அசோக் குமாருக்கு ஆதரவாகவும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் தற்போது நடிகை பூர்ணாவும் தன்னுடைய கருத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில் 'அசோக் குமார்' சிறந்தவர்களில் எப்போதும் சிறந்தவராக இருக்கிறார். நல்ல மனம் படைத்தவர். நீங்கள் எங்களை விட்டு போக முடியாது. எப்போதும் எங்களுடனேயே தான் இருக்கிறீர்கள். அன்பு செழியன் போன்றவர்கள் தான் சினிமாவில் இருக்ககூடாது.
மேலும் இந்த உலகத்தை விட்டு அசோக் குமார் சென்று விட்டார். அன்பு செழியனுக்கு பெரிய தண்டனை கொடுக்க வேண்டும். இதை நாம் செய்ய முடியும். இதற்காக நான் ஒன்றாக கைகோர்த்து செயல்படுவோம் என்று தெரிவித்து... அன்பு செழியனை பீப் போடும் அளவிற்கு மோசமான வார்த்தைகளை திட்டி ட்விட் செய்துள்ளார்.
பூர்ணா அசோக் குமார் துணை இயக்குனராக இருந்த, கொடி வீரன் படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.