
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறந்து வரும் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் முகமூடி என்ற படத்திற்கு பிறகு தற்போது பீஸ்ட் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ், லிலிபுட் ஃபரூக்கி, ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், அன்குர் அஜித் விகால் ஆகியோரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடிக்கத்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படம் அடுத்த வருடம் கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பூஜா ஹெக்டே தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பாலிவுட் எப்போதும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பரபரப்பாக இருந்து வரும் பூஜா, சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்தது குறித்து புகைப்படத்தை வெளியிட்டு அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அது இப்போது நனவாகி விட்டது என தனது மகிழ்ச்சியை தெரிவித்து பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இவருடைய இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடிப்பதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.