BiggBoss Tamil: அபிஷேக்கை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்த மேலும் ஒரு போட்டியாளர்

manimegalai a   | Asianet News
Published : Nov 23, 2021, 07:07 PM IST
BiggBoss Tamil: அபிஷேக்கை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்த மேலும் ஒரு போட்டியாளர்

சுருக்கம்

அபிஷேக் ராஜா கடந்த சில தினங்களுக்கு முன்னர்  பிக்பாஸ் வீட்டுக்குள் ரீ-எண்ட்ரி கொடுத்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்றுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி, பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் துவங்கிய பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி, தற்போது 50 நாட்களை நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் ஒவ்வொரு வார இறுதியில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம்.

அதன்படி இதுவரை நதியா சங், சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, அபிஷேக் ராஜா, இசைவாணி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதில் அபிஷேக் ராஜா மட்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். 

தற்போது இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், இந்த வாரம் அவருக்கு பதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார் என்பது சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது.

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் ஒருவர் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இன்று வெளியான புரோமோ மூலம் இது உறுதியாகி உள்ளது. அந்த போட்டியாளரின் பெயர் அமிர். இவர் ஒரு டான்ஸ் மாஸ்டராம். 'ஜோடி', 'கிங்ஸ் ஆஃப் டான்ஸ்', 'டான்ஸ் Vs டான்ஸ்', 'டான்ஸ் ஜோடி டான்ஸ்', ‘பிபி ஜோடிகள்’ என பல்வேறு நடன நிகழ்ச்சிகளுக்கு இவர் கோரியோகிராபராக பணியாற்றி உள்ளார். 

மேலும் இவர் பிக்பாஸ் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்திய டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் நெருங்கிய நண்பர் என்றும் கூறப்படுகிறது. நடிகர் விஜய்யின் நண்பர் சஞ்சீவ் தான் வைல்டு கார்டு எண்ட்ரியாக செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமிர் சர்ப்ரைஸ் எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். அவர் பற்றிய மேலும் விவரங்கள் இன்றைய எபிசோடில் தெரியவரும்.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஆன்லைனில் ரவுடியிசம்... விஜய் ரசிகர்களால் பராசக்திக்கு பின்னடைவு - கொக்கரித்த சுதா கொங்கரா
Pandian Stores 2: "எல்லா நகையும் கவரிங் தானே?" - மொத்த உண்மையும் புட்டு புட்டு வைத்த மீனா.! பாக்கியம் ஷாக்!