என் பொண்ணுக படிப்பே போச்சு.. ரவுடி பேபி சூர்யாவை கைது விவகாரம்... தற்கொலை செஞ்சிப்பேன்! பகீர் கிளப்பும் பெண்!

Published : Nov 23, 2021, 06:19 PM IST
என் பொண்ணுக படிப்பே போச்சு.. ரவுடி பேபி சூர்யாவை கைது விவகாரம்... தற்கொலை செஞ்சிப்பேன்! பகீர் கிளப்பும் பெண்!

சுருக்கம்

யூ-டியூப்பில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வரும், ரவுடி பேபி சூர்யாவை (Rowdy baby suriya) கைது செய்யவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்வேன் என ஜெனிபர் தனம் என்பவர் கமிஷனர் அலுவலகத்தில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

யூ-டியூப்பில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வரும், ரவுடி பேபி சூர்யாவை கைது செய்யவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்வேன் என ஜெனிபர் தனம் என்பவர் கமிஷனர் அலுவலகத்தில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிக்-டாக்கில் அரைகுறை ஆடையுடன் ஆபாச நடனமாடி பேமஸ் ஆனவர் தான் ரவுடி பேபி சூர்யா. தற்போது யூ-டியூப் சேனல் மூலமாக வீடியோ போடுவது, ஆபாசமாக பேசுவது, கொச்சையான வார்த்தைகளை பேசி சண்டையிடுவது என சமூக வலைத்தளத்தில் வேண்டாத வேலைகளை செய்து வருகிறார்.

சமீபத்தில் ரவுடி பேபி சூர்யா சிங்கப்பூருக்கு சர்வீஸுக்குப் போறேன் நீயும் வர்றியா? என டிக்-டாக் பிரபலமான இலக்கியாவை அழைக்கும் ஆடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இதையடுத்து அந்த ஆடியோவை வெளியிட்ட யூ-டியூப் சேனலைச் சேர்ந்த நபரை ரவுடி பேபி சூர்யா மிரட்டும் ஆடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த சர்ச்சைகளுக்கு வழி வகுத்து வரும், ரவுடி பேபி சூர்யா மீது, புகார் அளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஒரு பெண்.

சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த ஜெனிபர் தனம் என்கிற பெண்ணுடன், சேர்ந்து சுமார் உட்பட 10-க்கும் மேற்பட்ட பெண்கள் டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை அவர் மீது புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியுள்ளார். மேலும் தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதாகவும், ஒருவர் கல்லூரியிலும், மற்றொருவர் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கொரோனா பிரச்சனை காரணமாக பள்ளிகள் இயங்காத போது, 'தனது பிள்ளைகள் ஆன்லைனில் படித்து வந்தனர். அப்போது சமூக வலைதளங்களில் ரவுடி பேபி சூர்யா ஆபாசமாக பேசும் வீடியோ அடிக்கடி வந்தது. இது பற்றி ரவுடி பேபி சூர்யாவை தொடர்பு கொண்டு கேட்டபோது தன்னை ஆபாசமாக பேசியதோடு தனது நம்பரை சமூக வலைதளங்களில் பாலியல் தொழிலாளி எனக்கூறி பதிவு செய்துவிட்டார். இதனால் பலர் தன்னை தொடர்பு கொண்டதால், குடும்பத்தில் பிரச்சனை வந்தது மட்டும் இன்றி, தன்னுடைய பிள்ளைகளாலும் ஆன் லைன் படிப்பை தொடர முடியாமல் போனது.

எனவே இதுகுறித்து நான் நேரடியாக கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கொடுத்ததாகவும், ரவுடி பேபி எனப்படும் சுப்பு லட்சுமி கஷ்டத்தில் சிக்கியுள்ள பெண்களை குறிவைத்து அதிக பணம் தருவதாக கட்டாயப்படுத்தி சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் பாலியல் தொழிலுக்கு அனுப்பி வருகிறார். காவல்துறை, முதல்வர் என யாரிடம் சென்றாலும் தன்னை  ஒன்றும் செய்யமுடியாது என கூறி மிரட்டி வருகிறார். இவருக்கு உறுதுணையாக சில அரசியல்வாதிகள் உள்ளதாகவும், அதற்கான ஆதாரமும் தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே போல் ஒன்றரை வயது குழந்தையின் தாயான ஒரு பெண்ணை ரவுடி பேபி சூர்யா மிரட்டுவது போன்ற வீடியோவையும் அனைத்து பத்திரிகையாளர்கள் முன்பு போட்டு காட்டிய ஜெனிபர் தனம், ரவுடி பேபி சூர்யாவை கைது செய்தால் அனைத்து ஆதாரங்களையும் நான் சைபர் கிரைம் மற்றும் போலீசில் ஒப்படைக்க தயாராக உள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறி பகீர் கிளப்பியுள்ளார். தற்போது வரை சூர்யா கைது செய்யப்படாத நிலையில், விரைவில் கைது செய்யப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Karisma Kapoor Age: 52 வயசுலயும் இப்படியா? ஸ்டைலில் அசத்தும் கரிஷ்மா கபூர்!
Independence Day : இந்த தேசபக்தி படங்களை இன்னும் பார்க்கலயா? ஒவ்வொன்றும் வேற லெவல்!