பொன்னியின் செல்வன் முதல் பாடலுக்கே இவ்வளவு வரவேற்பா?

By Kanmani P  |  First Published Aug 1, 2022, 9:12 PM IST

கார்த்தி இடம் பெற்றிருந்த பொன்னியின் நதி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது இந்த பாடல் ஐந்து மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.


மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவாகியுள்ள இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகியுள்ளது. இதில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, பிரபு, சரத்குமார்,  பிரபு, பிரகாஷ்ராஜ், ரஹ்மான் மற்றும் பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கி வேடங்களில் நடித்துள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு தோட்டா தரணி கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். 

ராஜராஜ சோழன் வரலாற்றை மையமாகக் கொண்டுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி அருள்மொழிவர்மன் அதாவது ராஜராஜ சோழனாக நடிக்கிறார். இவருடன் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், குந்தவையாக திரிஷாவும், வல்லவராயன் வந்திய தேவனாக கார்த்தியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு...என்ஜாய் எஞ்சாமி அறிவின் குற்றச்சாட்டிற்கு விளக்கமளித்த சந்தோஷ் நாராயணன்!

வெளியீட்டு உரிமையை லைகா ப்ரொடக்ஷன் பெற்றுள்ள இந்த படத்தை மணிரத்தினம், அல்லி ராஜு, சுபாஸ்கரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்புகளை பெற்றிருந்தது. அதோடு டீசர் வெளியீட்டு விழா குறித்தான புகைப்படங்கள் வைரலாகின. 

மேலும் செய்திகளுக்கு...சமீபத்தில் ரிலீஸான யானை..தணிக்கையை மாற்றியமைக்க மேல் முறையீடு

 

இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் சென்னையில் வெளியிடப்பட்டது. சமீபத்தில் வெளியான இந்த பாடல் விழாவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.  கார்த்தி இடம் பெற்றிருந்த பொன்னியின் நதி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது இந்த பாடல் ஐந்து மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு...சிரஞ்சீவி, சல்மான் கான், பிரபுதேவா உடன் காட்பாதர்..மெகா பாடலை முடித்த படக்குழு!

 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான், ஏ.ஆர்.ரைஹானா, பாம்பா பாக்யா உள்ளிட்டோர் பாடிகியுள்ளனர். இளங்கோ கிருஷ்ணன் பாடல் வரிகளை இயற்றியுள்ளார். காவிரியாள் நீர்மடிக்கு என துவங்கும்  இந்த பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவானது.பொன்னியின் செல்வன் வரும் செப்டம்பர் 30 -ம் தேதி வெளியாகவுள்ளது.

click me!